இது ஆபத்தானது

சில நாட்களாக பொன்பரப்பி தமிழரசனை பெரும் தியாகி போலவும் பெரும் தலித் போராளி போலவும் சிலர் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்

இது ஆபத்தானது

அவன் ஒரு புலிபினாமி, புலிகளின் ஈழத்து அடாவடியினை தமிழர் அமைப்பு பெயரில் இங்கு அரங்கேற்றியவன்

1980களில் தமிழக அமைதிக்கு சவால்விட்டவன், சில பல குண்டுவெடிப்ப்பு இன்னபிற சர்ச்சைகளில் சிக்கியவன்

சாதி ஒழிப்பு , தலித் அமைப்பு, தமிழர் அமைப்பு என்ற போர்வையில் ஒளிந்திருந்த தேசவிரோதி

உச்சமாக ஈழத்து புலிகள் ஸ்டைலில் பொன்பரப்பி வங்கியினை கொள்ளையிட முயன்றபொழுது பொதுமக்களே அடித்து கொன்றனர்

ஆம் பொதுமக்கள் பணத்தையே கொள்ளையிட முயன்று மக்களாலே அடித்து கொல்லபட்ட ஒருவனை பெரும் தியாகியாக்க திருமா கோஷ்டி முயல்வது பெரும் ஆபத்து

நிச்சயம் ராமதாஸ் கும்பல் நல்லது அல்ல ஆனால் அதற்கு பதிலாக பழைய தேசவிரோதி ஒருவனை அதுவும் பொதுமக்களால் அடித்து கொல்லபட்ட ஒருவனை நினைவு கூறி அவனை தியாகியாக்குவது நாட்டுக்கு நல்லதல்ல

சிந்திக்க தெரிந்த, வரலாறு அறிந்த திமுகவினரே ராமதாஸை எதிர்ப்பதாக நினைத்து , திருமாவுக்கு துணை செல்வதாக நினைத்து இந்த கொடூர தேசவிரோதிக்கு துணை செல்வது சரியல்ல‌

திமுகவினர் இப்பொழுதெல்லாம் நிறைய தடுமாறுகின்றார்கள்