இது இந்தியாவுக்கு ஒருவகை அவமானமே

டெல்லி மகா மோசமான சூழலை எதிர்கொண்டிருக்கின்றதது, உலக அரங்கில் இது இந்தியாவுக்கு ஒருவகை அவமானமே

கடும் புகைமூட்டத்தால் காற்று மாசுபாடும் விமானங்களே திணறும் நிலைக்கு சென்றிருக்கின்றது

நீர்வளம் உட்பட்ட பல காரணங்களுக்காக டெல்லியினை சுற்றி உருவாகியிருக்கும் தொழிற்சாலைகளே இதற்கு காரணம்

அவற்றை நாடு முழுக்க பரவாலாக்குதல் மற்றும் கடுமையான காற்று மாசு சட்டத்தை இறுக்குதல் அன்றி இனி டெல்லியினை காப்பாற்ற முடியாது, இதற்காக தலைநகரை மாற்றமுடியாது

அதனால் தொழிற்சாலைகளை நாடு முழுக்க பரவலாக்க வேண்டும் இன்னொரு விஷயம் டெல்லியின் அதிகார மையத்தை சில நகரங்களுக்கு பகிரலாம்

அப்படி செய்யும் பொழுது பல நெருக்கடிகள் குறையும்

நிலத்தில் போக்குவரத்து நெருக்கடி,, வானில் புகைமூட்டம் என சிக்கிதவிக்கும் டெல்லிக்கு விரைவில் ஆசுவாசமூச்சு விட அவசர வழிசெய்தல் வேண்டும்