இது எதில் சென்று முடியுமோ தெரியாது
நடிகர் தேவன் என்பவர் ரஜினி வாழ்வில் விளையாடிவிட்டார், இது எதில் சென்று முடியுமோ தெரியாது
தேவனார் என்ன கொளுத்தி போட்டார் என்றால் “பாட்சா படத்தில் நான் ரஜினியோடு நடித்தபொழுது அவர் என்னிடம் மனம் விட்டு பேசினார்
அப்பொழுது பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்த காலத்தில் நிர்மலா என்றொருவரை காதலித்தாராம்,
பெரும்காதலாம்
அந்த பெண் மருத்துவ மாணவியாம் , ரஜினி நடிகராக அவளே காரணமாம், முதன் முதலில் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியது அவளாம்
ரஜினி சினிமாவுக்கு அலைந்த காலத்தில் அவளை காணவில்லையாம், ரஜினி சல்லடை போட்டு தேடியும் நிர்மலா அகபடவில்லையாம்
இப்பொழுதும் ரஜினி அப்பெண்ணை காண துடிக்கின்றாராம், போன வருடம் கூட தேடினாராம், ரஜினியின் முதல் காதல் அவ்வளவு தூய்மையானது
அவரின் காதல் வெற்றி அடையாமல் போனதில் எனக்கு வருத்தம், ” என சொல்லிவிட்டார்
பாட்சா படம் தனுஷ் தொட்டிலில் பால் குடித்துகொண்டிருந்த பொழுது வந்தது, இப்பொழுது தனுஷ் மகனே பள்ளிக்கு செல்கின்றான் இந்த இரு தலைமுறை காலம் பேசாமல் இருந்த தேவன் இப்பொழுது ஏன் பேசினார்?
நாம் நம் வழக்கமான பல கோணங்களில் இதை பார்க்கலாம்
இந்த தேவன் அதிமுக மற்றும் திமுக கைகூலியாக இருப்பாரோ இல்லை நாம் தமிழர் தும்பிகளிடம் லஞ்சம் வாங்கியிருப்பாரோ?

ஒருவேளை ரஜினியினை மிரட்ட அமித்ஷா சொல்ல சொல்லிய விஷயத்தை இவர் திசைமாறி சொல்லிவிட்டாரோ?
இல்லை ரஜினியே தன் முன்னாள் காதலி “அந்த” லதா அல்ல இந்த நிர்மலா என சொல்லவைத்து வீட்டில் நிம்மதியினை தேடியிருப்பாரோ?
தர்பார் உட்பட பல படங்களில் தனக்கு வாய்ப்பு தரபடவில்லை என்பதால் தேவன் பழிவாங்குகின்றாரோ?
தனுஷோ இல்லை அவரின் மருமகனோ ரஜினியினை பழிவாங்குகின்றார்களோ?
ஒருவேளை அந்த காதல் தோல்விதான் அவரை ஆன்மீகவாதி ஆக்கிற்றோ?
பல மர்மங்கள் இருக்கலாம்
இனி அந்த லதா ரஜினிகாந்துக்கும் ரஜினிக்கும் போதாத காலம் “நானே அந்த நிர்மலா” என பலர் சந்திக்க முயற்சிக்கலாம், ரஜினி சந்தித்துவிட்டு அது நீ இல்லை என்றால் அதனால் என்ன? பின் உங்களை சந்திக்கும் வாய்பினை எப்படி பெறுவதாம்? என ரஜினியினை வெறுப்பேற்றலாம்
அந்த பேராசிரியை நிர்மலா தேவி நானே அந்த நிர்மலா என கிளம்பினால் ரஜினி நிலை என்னாகும்?
சந்தடி சாக்கில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில் யாராவது “அது வெண்ணிற ஆடை நிர்மலாவாக” இருக்குமோ என கிசுகிசுத்தால் என்னாகும்?
ரஜினி நிலை சிக்கல்தான்
எனினும் நம்மால் ஒரே ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகின்றது
ரஜினி சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை மாறாக ஆன்மீகம் மற்றும் இமயமலையினை மிக விரும்புகின்றார், ஆனால் குடும்ப சிக்கல் அதற்கு வழிசெய்யவில்லை
விடுதலையினை தேடிய ரஜினி தேவனுக்கு கண்ணை காட்டிவிட்டாரோ என்னமோ, இதனால் ஆத்திரமடையும் லதா ரஜினி அவருக்கு விவாகரத்து கொடுப்ப்பார் மஹா உற்சாகமாக காவி கட்டலாம் என நினைக்கலாம்
ஆனால் லதா ரஜினிகாந்த் பற்றி ஓரளவு தெரிந்ததால் சொல்கின்றோம், அவர் என்ன சொல்வார் தெரியுமா?
“ஓ மேன்.. வீரா படத்தின் மீனா பாத்திரத்தை நீதான் வடிவமைத்தாயா? இப்பொழுதுதான் உண்மை புரிகின்றது
இவ்வளவு காலம் என்னிடம் விஷயத்தை மறைத்து ஏமாற்றியதால் இன்னும் 20 படம் நடித்து கொடுத்துவிட்டு இமயமலைக்கு போ.. அதுதான் உனக்கான தண்டனை”