இது ஒருவித தந்திரம்
பாராளுமன்றத்து சென்று பாஜகவினை அலறவிட்டு சபையினை புரட்டி போட்டு திராவிட கொடி நாட்டுவோம் என சென்ற திமுக எம்பிக்கள் மேல் ஒரு சந்தேக பார்வை விழுகின்றது
இவர்கள் பல பிரச்சினைகளில் குதிக்கின்றார்கள், காஷ்மீர் முதல் பல விஷயங்களை எதிர்க்கின்றார்கள்
ஆனால் மசோதா வாக்கெடுப்புக்கு வரும்பொழுது எதிர்த்து வாக்களிக்காமல் ஓடிவிடுகின்றார்கள்
இது ஒருவித தந்திரம்
எதிர்த்து வாக்களித்தால் பாஜக அரசை பகிரங்கமாக எதிர்ப்பதாகிவிடும் அதை திமுக விரும்பவில்லை, அதே நேரம் மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கின்றது எனும் பெயரை தக்க வைக்கவும் விரும்புகின்றது
இதனால் பாராளுமன்றத்தில் என்ன விவகாரம் என்றாலும் குதிக்கின்றது, ஆனால் வாக்களித்து பாஜகவினை பகைக்காமல் ஓடிவிடுகின்றது
“நம்மை எதிர்க்காதவன் நம்மோடு இருக்கின்றான்” என்பது இயேசு சொன்னது
ஆக திமுக பாஜகவின் திட்டங்களை ரகசியமாக ஆதரிக்கின்றது, ஆனால் அரசியலுக்கு கத்துகின்றது
அவர்கள் கொடியில் மட்டுமல்ல, அவர்கள் அரசியலிலும் இரட்டை நிலை உள்ளதை உலகம் பார்த்து கொண்டிருக்கின்றது
வழக்கம் போல் ராகுல்காந்தி மட்டும் பார்க்காமல் இருக்கின்றார், அவர் அப்படித்தான்