இது கிறிஸ்துவத்துக்கு சோகமான மாதம்
இது கிறிஸ்துவத்துக்கு சோகமான மாதம்
பாரிசில் புகழும் பாரம்பரியமும் கொண்ட மாதா கோவில் எரிந்தது, இயேசு மேல் அறையபட்ட ஆணி, அவர் தலையின் முட்கிரீடம் உட்பட்ட பல புனித பொருட்கள் அங்குதான் இருந்தன
அவை காப்பாற்றபட்டன ஆனால் அந்த ஆலயம் பெரும் பழுதுபட்டது
அந்த சோகம் தீர்வதற்குள் இலங்கையில் அந்தோணியார் ஆலயமும், செபஸ்தியார் ஆலயமும் நொறுக்கபட்டன
இது கிறிஸ்தவ வரலாற்றில் வழிநெடுக நடப்பதுதான்
நொறுக்கபடுவதும் ஒழிக்கபடுவதும் அதிலிருந்து கிறிஸ்தவம் தளைத்து வருவதும் ஒன்றும் புதிதல்ல
காரணம் இயேசுவின் வாக்கே அப்படியானது
“இந்த தேவாலயத்தை இடித்து தள்ளுங்கள் மூன்றே நாளில் அதை கட்டுவேன்”
அந்த வாக்கு இந்த இரண்டாயிரம் காலமாக நிறைவேறியே வந்திருக்கின்றது
அது பாரிசிலும் நிறைவேறும், கொழும்பிலும் நிறைவேறும்
ஆலயங்கள் கட்டி எழுப்பபடும் பொழுதே மத ஒற்றுமையும் அன்பும் சகோதரத்துவமும் கட்டி எழுப்பபட வேண்டும்
ஆலயத்தை விட அதுதான் முக்கியமானது..
இதுவரை இயேசுவின் வார்த்தை எல்லாம் பலித்திருப்பதால் மிகுந்த வலுத்த விசுவாசத்துடன் அவரின் இந்த வார்த்தைகளையும் நம்பி கிறிஸ்தவ சமூகம் இந்த வலியான காலங்களை கடக்கின்றது
“இந்த தேவாலயத்தை இடித்து தள்ளுங்கள் மூன்றே நாளில் அதை கட்டுவேன்”