இது கொஞ்சம் சிக்கலான விவகாரம்
தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்ததை அடுத்து தன் நீண்ட கம்பளி போர்வையினை கழற்றியபடி களத்துக்கு வருகின்றனர் தாலிபன்கள்
இது கொஞ்சம் சிக்கலான விவகாரம்
ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேற நினைக்கின்றது, ஒருவகையான புரிந்துணர்வினை தாலிபன்களோடு செய்துகொண்டால் எல்லாம் சுபம் என வெளியேறலாம் என்பது அவர்கள் கணக்கு
ஒரு வல்லரசு ராணுவத்தை வெளியேற்றுமே தவிர அதிகாரத்தை விட்டு கொடுக்காது
இதனால் தாங்கள் விரும்பிய அரசை அமைத்துவிட்டு வெளியேறுவது அவர்கள் விருப்பம், ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது சீனா,ரஷ்யா,இந்தியா ஈரான் என பல நாடுகளுக்கு அனுகூலமானது பாகிஸ்தான் தவிர
ஆம் ஆப்கனை காட்டி பாகிஸ்தான் அடிக்கும் பணம் கொஞ்சமல்ல, ஆப்கனின் நிலவழி பாகிஸ்தானை நம்பி இருப்பதால் அமெரிக்கா அங்கு இருக்க இருக்க இவர்களுக்கு பணம்
தாலிபன்களை முறிக்க செய்து குழப்பத்தை நீட்டிக்க வைத்திருப்பதில் பாகிஸ்தானின் தந்திரம் இருக்கின்றது என்கின்றார்கள்
தாலிபான்கள் வெறியாட்டம் ஆடும்பொழுதெல்லாம் காஷ்மீரிலும் ஆடுவார்கள், பாகிஸ்தானின் தந்திரம் அப்படி
ஆப்கானிய அடியாட்களை இஸ்லாம் பூமி என இங்கே அனுப்பி கடும் அழிச்சாட்டியம் செய்வார்கள்
இந்தியா நிலமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது, இன்னும் கூடுதல் பாதுகாப்பினை காஷ்மீருக்கு வழங்க ஆயத்தமாகின்றது