இது நம்ம பூமி என்றொரு தலைவி படம்
இது நம்ம பூமி என்றொரு தலைவி படம் ஓடி கொண்டிருக்கின்றது
ஒரு பெண் எப்படி தன் தியாக காதலால் பகை குடும்பங்களை இணைத்து ஊரை காக்கின்றாள் எனும் அற்புதமான கதை
தலைவிதான் கதாநாயகி , கார்த்திக் துணை நடிகர். இது போக ஏராளமான நடிகர்கள்
ஆனால் நட்சத்திரங்களிடையே நிலா போல தனித்து நிற்கின்றார் தலைவி, என்ன நடிப்பு? என்ன அழகு?
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் தேசியவிருது கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை, எல்லாம் அரசியல்
தங்கசிலையினை சந்தணத்தில் தோய்த்தது போல் தலைவி அப்படி ஒரு பிரகாசம்…
படத்திற்கு “இது குஷ்பு பூமி” என பெயர் வைத்திருந்தால் நன்றாய் பொருந்தியிருக்கும்
படத்தின் பெயராக இல்லாவிட்டால் என்ன விரைவில் தமிழகத்தையே “குஷ்பு பூமி” என மாற்றிவிடலாம், ஒன்றும் சிக்கல் இல்லை