இது பாஜகவின் காலம், அவர்கள் ஆடுகின்றார்கள் ஆடட்டும்

காஷ்மீரில் மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருகின்றது என்பது தெரியவில்லை, ஆனால் நடக்கும் காட்சிகள் மாபெரும் திட்டத்தை அரசு வைத்திருப்பதை தெளிவாக காட்டுக்ன்றன‌

370ம் சட்டபிரிவு ரத்து, இன்னும் காஷ்மீர் 3 மாநிலமாக பிரிப்பு ஏக ஏக செய்திகள் வருகின்றன‌

அரசு மறுத்தாலும் அதன் அசைவின்றி இம்மாதிரியான செய்திகள் வெளிவர வாய்ப்பு இல்லை

மக்களின் நாடிதுடிப்பினை காண அரசு இன்னொரு பக்கம் மூலம் செய்திகளை கசிய விடுகின்றது என்பது அரசியல் புரிந்தோருக்கு புரிகின்றது

அதிரடி செய்திகள் விரைவில் வரலாம், காலத்தை மீறி யார் என்ன செய்துவிட முடியும்?

இது பாஜகவின் காலம், அவர்கள் ஆடுகின்றார்கள் ஆடட்டும்

நாட்டுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் நல்லது நடந்தால் வரவேற்கலாம்