இது வழக்கமான பயிற்சி அல்ல
இந்திய ராணுவம் தன் மிகபெரிய போர் பயிற்சியினை பாகிஸ்தான் எல்லையில் நடத்தியிருக்கின்றது, இது வழக்கமான பயிற்சி அல்ல
வழக்கமான பயிற்சி என்றால் சுடுவார்கள் ஓடுவார்கள், பதுங்குவார்கள் ஒருமாதிரி பயிற்சி பெற்றுவிட்டு திரும்பிவிடுவார்கள்
இந்த பயிற்சி அப்படி அல்ல, ஒரு நாட்டை கைபற்றுவது எப்படி என்பதும், அதை கைபற்றி தக்க வைப்பது எப்படி என்பதுதான் பயிற்சி
பீரங்கி டாங்கி விமானபடை உட்பட பல பிரிவுகள் எல்லாம் களமிறங்கியிருக்கின்றன, கப்பல் படையும் இணையுமாம்
பாகிஸ்தான் எல்லை, நாட்டை கைபற்றும் பயிற்சி , தக்கவைத்து தளம் அமைக்கும் பயிற்சி எல்லாம் கூட்டி கழித்து பாருங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏதோ திட்டம் இருப்பதாக தெரியவில்லை?
இதை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது
இதுபோக இந்திய ராணுவ அதிகாரிகள் வாட்சப் மற்றும் முகநூலில் இருக்க கூடாது, பதிவுகள் படங்கள் போடகூடாது, அதெல்லாம் அரசியல்வாதிக்கு சரி ராணுவத்திற்கு அல்ல என உத்தரவிட்டுவிட்டார்கள்
இந்திய ராணுவபயிற்சி ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்