இதெல்லாம் இந்தியாவுக்கு நல்லதல்ல

இந்தியா வந்துவிட்டு நேபாளத்துக்கு சென்றிருக்கின்றார் ஜின் பெங், சீன அதிபர் ஒருவர் நெடுங்காலத்துக்கு பின் அங்கு கால்வைப்பது இதுதான் முதல்முறை

நேபாளம் உலகில் யாருக்கும் அடிமைபடாத நாடு எனும் பெருமையினை கொண்டது அல்லது அதை அடிமைபடுத்தி என்ன ஆக போகின்றது என பலர் பரிதாபமாக விட்டு சென்ற நாடு எனவும் சொல்லலாம்

ஆனால் உலகின் ஒரே இந்துநாடு என்ற பெயருடன் இருந்தது, இந்தியாவுக்கு வட எல்லையில் பூடான் போல மிக நம்பகமான நாடாக இருந்தது, ஒரு அரணாக இருந்தது

ஆம் நேபாளம் மன்னர் கையில் இருக்கும் வரை இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது நிலை

நேபாளமும் திபெத்தை விழுங்கிய சீனாவிடம் எச்சரிக்கையாய் இருந்தது, நிலம் சூழ் மலைநாடு எனும் வகையில் இந்தியாவினை சார்ந்திருப்பதே அதற்கும் அவசியமாய் இருந்தது

இந்தியாவின் கோட்டைசுவராக இருந்த நாடு அது..

இந்திய உளவுதுறையின் படுபயங்கர சொதப்பலால் நேபாள அரசகுடும்பம் அழிய மாவோயிஸ்டுகள் கைக்கு நேபாளம் சென்றது, அதன் பின் இந்து நாடு எனும் அடையாளமில்லை

மாவோயிஸ்டுகள் என்பது சீன கைகூலிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று

அந்த நேபாளத்திற்கு சென்று பல்லாயிரம் கோடிகளை அள்ளிவிட்டுவிடு சீனா சென்றிருக்கின்றார் ஜின்பெங்

இந்தியா அருணாசலபிரதேசத்தில் நடத்திய ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக‌ ஊமைகுத்தாக இப்படி குத்தியிருக்கலாம்

இதெல்லாம் இந்தியாவுக்கு நல்லதல்ல, இந்தியாவிடமும் திட்டங்கள் இருந்தால் நல்லது