இதெல்லாம் தமிழக சினிமாவில் இருந்து சமூகத்துக்கு வந்ததா?

சென்னையில் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அடிக்கடி ஊர் சுற்றிய மாணவியருக்கு ஆட்டோ டிரைவர்களுடன் நட்பு ஏற்பட்டிருக்கின்றது

2 மாணவிகளும் அவர்களோடு பழகியிருக்கின்றார்கள், மாணவிகளுக்கு இலவச ஆட்டோ பிரியாணி இன்னும் என்னவெல்லாமோ கிடைத்திருக்கின்றது. ஆட்டோ டிரைவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி செய்தியில்லை

காலையில் பள்ளிக்கு கிளம்பி செல்வதாக சொல்லி ஆட்டோ டிரைவர்களுடன் சுற்றுவதும் மாலை சீருடையில் வீட்டுக்கு வந்து பாடம் படித்தும் மாணவிகள் கல்வி கற்றிருக்கின்றர்

இந்நிலையில் ஆட்டோ டிரைவர்கள் மாணவியர் இருவரை கடத்தி சென்று கும்பகோணத்தில் செயல்முறை வகுப்பு நடத்தியிருக்கின்றனர், ஒரு மாணவி சென்னைக்குள் இன்ப சுற்றுலாவில் இருந்திருக்கின்றார்

அவர்மேல் சந்தேகபட்ட காவல்துறை (நம் காவல்துறை என்றால் சும்மாவா? நக்கீரன் பத்திரிகை எல்லாம் படிப்பார்கள், இந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பார்களா இல்லையா?) மாணவியினை பிடித்து விசாரித்ததில் சம்பவம் வெளிவந்திருக்கின்றது

மாணவியர் ஒழுங்காக பள்ளிக்கு செல்கின்றார்களா என பெற்றோரும் தேடவில்லை, மாணவியர் வரவில்லை என பள்ளியும் தேடவில்லை

விளைவு ஆட்டோக்காரர்கள் பாடம் நடத்திவிட்டார்கள்

இதுபற்றி காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது, தமிழக பெற்றோர்களும் பள்ளி ஆசிரியரும் கவனமாய் இருத்தல் நலம்

ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் உள்ள பெற்றோர்கள் கூடுதல் கவனமாய் இருப்பது நல்லது

ரிக்ஷாக்காரன், பாட்சா, காதல்கோட்டை போன்ற படங்களின் தாக்கமோ என்னமோ ஆட்டோக்காரன் மேல் காதல் மாணவிகளுக்கு எளிதாக வந்துவிடுகின்றது

ஆம், ஆட்டோவுக்கு லோன் கொடுக்கும் பேங்க் மேனேஜர் மேல் வராது, ஆட்டோவுக்கு சான்றிதழ் கொடுக்கும் ஆர்.டி.ஓ அலுவலகத்தவன் மேல் வராது,

ஆனால் ஆட்டோக்காரன் மேல் மட்டும் வரும்

டீக்கடை ஓணர்மேல் வராது, டீ ஆற்றுபவன் மேல் வரும்

பஸ் ஓணர்மேல் வராது ஆனால் டிரைவர் கண்டக்டர் மேல் உடனே வரும்

இதெல்லாம் தமிழக சினிமாவில் இருந்து சமூகத்துக்கு வந்ததா? இல்லை சமூகத்தில் இருந்து சினிமா எடுத்ததா என்றால், சமூகத்தில் இருந்தே சினிமாவுக்கு சென்றிருக்கின்றது என்பதுதான் உண்மை