இதை நாம் என்றோ சொன்னாம்

எக்காரணம் கொண்டும் ராஜிவ் கொலை குற்றவாளிகளான 3 இந்தியரையும் 4 அன்னிய நாட்டவரையும் விடமுடியாது என சொல்லிவிட்டது மத்திய அரசு

நாம் அன்றே சொன்னதைத்தான், காங்கிரசும் சோனியா அரசும் சொல்லாமல் மவுனம் காத்ததைத்தான் மோடியின் ஆட்சியில் அமித்ஷாவின் துறை தெளிவாக சொல்லியிருகின்றது

“7பேர் விடுதலை என்பது உலகில் இந்தியாவின் தரத்தை கெடுக்கும் மகா மோசமான முடிவு, இந்தியா அதை ஒருபோதும் எடுக்காது”

இதை நாம் என்றோ சொன்னாம்

காங்கிரசுக்கும் இதுதான் முடிவு ஆனால் தமிழகத்தில் அதற்கு சிதறி கிடக்கும் வாக்குகளுக்காக அது கள்ளமவுனம் காத்தது, பாஜகவுக்கு அப்படி எதுவுமே இல்லை என்பதால் சொல்லிவிட்டது

வாக்கு இருந்தாலும் அவர்கள் இதைத்தான் சொல்வார்கள் அவர்கள் இயல்பு அப்படி

சரி, 7 பேரையும் விடமாட்டோம் என மத்திய அரசு உறுதியாக சொன்னபிறகும் சத்தமில்லையே ஏன்?

வைகோவினை காணவில்லை, சீமான் பூபந்து விளையாடுகின்றார், திருமுருகன் காந்தி தூங்குகின்றார்

ராமதாஸ் இதர கணக்கில் பிசி , முக ஸ்டாலினுக்கு எடுத்து சொல்பவர்களையும் காணவில்லை

ஆக இதுதான் உண்மை, இங்கு எல்லாமே அரசியல் , தெரிந்த முடிவுக்கு அவரவர் தேவைக்கும் காலத்துக்கும் ஏற்ப ஆடுவார்கள்

அற்புதம்மாள் இனியும் கிளம்பினால் “இந்த நூற்றாண்டின் மிக சிறந்த நடிகை” என்ற பட்டத்தோடு அமரவைத்துவிடலாம்