இதோ அந்த வள்ளுவன் சிலைக்கான கால்கோள் விழா

என்னமோ கன்னியாகுமரி கடற்கரையினை ஆர்.எஸ்.எஸ் வளைத்து விவேகானந்தர், பரம்மஹம்சர், வியாசர், வால்மீகிக்கு எல்லாம் சிலை வைக்க வந்ததாகவும் , கருணாநிதி அதை தடுத்து வள்ளுவனுக்கு சிலை வைத்ததாகவும் திமுக உபிக்கள் சிலிர்த்து கொண்டிருந்தன‌

இதோ அந்த வள்ளுவன் சிலைக்கான கால்கோள் விழா

அழைத்திருப்பது யார் தெரியுமா? அந்த ராணடே எனும் பெருமகன்

எந்த ராணடே?

விவேகானந்தர் நினைவாலயத்தை கன்னியாகுமரியில் அமைக்க வந்து, அது கிறிஸ்தவ இந்து மதமோதலாக வெடித்தபொழுது அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டி ஒரு சின்ன எதிர்ப்பு கூட இல்லாமல் மகா சாமார்த்தியமாக முடித்தானே அந்த R.S.S ராணடே

ஆம் , வள்ளுவனை இந்திய ஞானமகனாக கருதி ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அன்றே சிலை அமைக்க ஓடிவந்திருக்கின்றது, ராமசந்திரன் தன் ஆட்சியில் பூரண ஒத்துழைப்பும் வழங்கியிருகின்றார்

இப்பொழுது உபிக்கள் வசமாய் சிக்கிவிட்டன‌

இந்த சிலை திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகளை திமுக ஏன் அழைக்கவில்லை? ஆக அவர்களை ஒதுக்கி வைத்து பிரிவினையினை வளர்க்க முயன்றது யார்?

ஆக ராமசந்திரன் தேசிய ஒருமைபாட்டை வளர்த்திருக்கின்றார், கருணாநிதி அதை செய்யவில்லை அப்படித்தானே?