இதோ உண்மையாயிற்று
முழுக்க நியாயம் இந்தியா பக்கம் இருப்பது புரிந்தாலும், யாரிடமும் இதை புகாராக சொன்னால் செருப்படி நிச்சயம் என உணர்ந்தாலும் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை
காஷ்மீர் என்பது அவர்களின் மாபெரும் அரசியல், வோட்டு முதல் ராணுவ விவகாரம் வரை அதுதான் அங்கு மந்திரக்கோல்
அதை முறித்துபோட்டால் என்ன செய்வார்கள்? அதுவம் இம்ரான் காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் காத்தார் என்றால் அவரின் அரசியல் என்னாகும்? அவர் முதுகில் மிதித்துவிட்டு ராணுவம் பதவியில் அமர எவ்வளவு நாழிகை ஆகும்?
இதனால் பெரிதாக சவுண்ட் எல்லாம் விட்டு ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் , அதாவது சக்தி வாய்ந்த அவையில் காஷ்மீர் விவகாரத்தை உலக சிக்கலாக்க தீர்மானம் கொண்டுவந்தது பாகிஸ்தான்
ஆனால் ஆதரவு என யாருமில்லை, சீனா முதலில் அமைதியாக இருந்தது, “அண்ணே, நீயுமாண்ணே. உன்ன நம்பித்தானண்ணே வந்தேன், அசிங்கபடுத்திட்டியண்ணே” என பாகிஸ்தான் கண்ணை கசக்கியவுடன் கையினை உயர்த்தியது சீனா
ஆயினும் வேறு நாடுகள் எல்லாம் “இவனுகளுக்கு வேலை இல்லை” என்பது போல ஆதரவளிக்கவில்லை
பாகிஸ்தானின் தீர்மானம் தோற்றிருப்பது இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி
இந்தியா இதில் மாபெரும் ராஜதந்திரத்தை கடைபிடித்தது, அதாவது ஐ.நாவுக்கான தூதராக சையது பக்ரூதீன் எனும் இஸ்லாமியரை அனுப்பியது

ஒரு இந்திய இஸ்லாமியர் காஷ்மீர் உள்நாட்டு விவகாரம், இந்தியாவின் சொந்த விஷயம் என உரக்க சொல்லும் பொழுதே அவைக்கு பல விஷயங்கள் புரிந்தன, சில நாடுகள் புன்முறுவல் பூத்தது
ஆம், இஸ்லாமிய தூதரை கொண்டே, இந்தியாவில் இஸ்லாமியருக்கு சிக்கல் இல்லை என சொல்ல வைத்தது மாபெரும் ராஜதந்திரம்
தீர்மானம் தோற்கும் என்பது என்றோ தெரிந்த விஷயம், அது பாகிஸ்தானுகும் தெரியும்
ஆனாலும் சம்பிரதாயத்துக்கு ஆடிவிட்டு வந்து வாயில் துண்டை வைத்து அழுது கொண்டிருக்கின்றது
இந்தியா வெற்றி புன்னகையில் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றது
“அப்பாடா, சனியன் இனி வரமாட்டான்” என தன்னை ஆசுவாசபடுத்திகொள்கின்றது சைனா
உலகெல்லாம் இந்தியாவுக்கு பெரும் ஆதரவும்,நற்பெயரும் குவிகின்றது
காந்தி கொலை சர்ச்சை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் எல்லாம் தாண்டி பாஜக அரசு உலக அரங்கில் பெரும் இடத்தை பெற்றுவிட்டது
இது மாபெரும் வினோதம் அல்லது சாதனை
ஒரு காலத்தில் மோடிக்கு விசா வழங்கா அமெரிக்கா காஷ்மீர் விவகாரத்தில் ஒதுங்கி செல்வது நம்ப முடியா ஆச்சரியம்
370ஐ நீக்கினால் இந்தியா பற்றி எரியும் என்ற இந்தியர்கள், இங்கு நிலவும் அமைதியினை பார்த்து அட இவ்வளவுதானா என ஆச்சரியபடுகின்றார்கள்

அதை செய்தால் பாகிஸ்தான் பொங்கும் என எதிர்பார்த்தவர்களும் அட அவனுக அவ்வளவுதானா என ஆச்சரியபடுகின்றார்கள்.
73 ஆண்டு கால சிக்கலில் முதன் முறையாக உலக அரங்கில் சாதித்திருக்கின்றது இந்தியா
இந்திய அரசுக்கும் விவகாரத்தை மிக சரியாக கையாண்ட உளவுதுறை, காவல்துறை, வெளியுறவுதுறை என எல்லா துறைக்கும் வாழ்த்துக்கள்
அப்படியே காஷ்மீர் விவகாரம் உலக விவகாரம் என சொல்லிகொண்டிருந்த வைகோ, திருமா, திமுக, திக போன்ற கோஷ்டிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
கருப்பு துண்டை தலையில் போட்டு அழுகின்றார் வைகோ, ஐநாவினை கண்டித்து தீர்மானம் இயற்றலாமா என யோசிக்கின்றார் ஸ்டாலின்
இனி எங்கே அத்துமீறுவது என மீசையினை தடவி அழுது கண்டிருகின்றார் திருமா
நாம் அன்றே சொன்னோம், உலக அரங்கில் இந்தியா தனி இடம் பெற்றாயிற்று இனி அதை அசைப்பார் யாருமிலர் என்று சொல்லியிருந்தோம்
இதோ உண்மையாயிற்று