இதோ.. பலுசிஸ்தான் தனிகொடி பிடிக்கின்றது….

Image may contain: people walking and outdoor

இந்தியா பிரியும் பொழுது பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கு பலுசிஸ்தான் மக்கள் இந்தியாவோடே இருக்க விரும்பினர், ஜின்னாவின் பாகிஸ்தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை

எல்லை காந்தி கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்

மூன்று துண்டாக உடைந்த இந்தியா 4 துண்டுகளாக உடையும் நிலை வந்தது, நாங்கள் தனிநாடாக இயங்கமாட்டோம் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என இயங்குவோம் என கபார்கான் சொன்னதெல்லாம் யார் காதிலும் விழவில்லை

பலுசிஸ்தான் மக்கள் கதறினர், அழுதனர் ஆனால் தேசபிரிவினையில் ரத்த ஆறு ஓடியதால் அக்குரல் எடுபடவில்லை

அடுத்து வந்த காஷ்மீர் பிரச்சினைகளால் அந்த பலுசிஸ்தான் மக்களை இந்தியா கண்டுகொள்ளவில்லை

அவர்களோ பாகிஸ்தானுடன் ஒருநாளும் இணைந்திருக்கவில்லை, போராடிகொண்டே இருக்கின்றார்கள் இன்றுவரை எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கின்றது

காஷ்மீரில் பாகிஸ்தான் செய்யும் அரசியல் போலவே பலுசிஸ்தானில் இந்தியாவும் செய்கின்றது, சிலநேரம் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் வந்து இந்திய தலைவர்களுடன் பேசும் விஷயங்களில் பலுசிஸ்தான் விவகாரமும் அடங்கி இருக்கின்றது

இப்பொழுது பலுசிஸ்தான் குரல் உலகெல்லாம் கேட்க தொடங்கிவிட்டது, ஐரோப்பாவில் வாசகமே பிடிக்க தொடங்கியாயிற்று

இந்தியா மவுனமாக சிரிக்கின்றது, பாகிஸ்தான் செய்வதறியாது திகைக்கின்றது

உண்மையில் பாகிஸ்தான் மக்கள் விரும்பி பிரிந்த தேசம் அல்ல, வலுகட்டாயமாக இஸ்லாம் என்ற போர்வையில் அரசியல்வாதிகளால் பிரிக்கபட்டது, அது ஒற்றுமையாக இராது என அன்றே சொல்லபட்டது

அப்படி வங்கம் பிரிந்தது, வர்சிஸ்தானில் பாகிஸ்தான் நுழைய முடியாது, இதோ பலுசிஸ்தான் தனிகொடி பிடிக்கின்றது

எப்படியோ அத்தேசம் உடையட்டும், அன்றொரு நாள் கதற கதற பலுசிஸ்தானியரை கைவிட்ட இந்தியா இனியாவது ராஜதந்திரத்தில் காப்பாற்றட்டும்