இத்திருநாடு தன்போக்கில் கம்பீரமாக நடை போடுகின்றது
பாகிஸ்தான் மிக கடுமையான எதிர்ப்புக்களையும் அதற்கான காரியங்களையும் மிக தீவிரமாக செய்கின்றது.
தூதரக விஷயங்களை நிறுத்தியது , ஏற்றுமதிகளை நிறுத்தியது என பல அழிச்சாட்டியங்களை செயதது
ஏற்றுமதி என்பது வேறொன்றுமல்ல பாகிஸ்தான் சிறிய நாடென்பதாலும் சிந்து பஞ்சாபில் அபரிமிதமான பருத்தி, கரும்பு விளைச்சல் உண்டென்பதாலும் சில ஏற்றுமதிகள் உண்டு , பாசுமதியும் உண்டு அவை முதல்தரமானவை
அந்த ஏற்றுமதியினை உலகு அறிய செய்துவிட்டு உலகம் அறியாமல் தீவிரவாதிகளையும் ஏற்பாடு செய்வார்கள் அதையும் நிறுத்தினால் நல்லது
இப்பொழுது இன்னொரு காரியத்தை செய்திருக்கின்றார்கள் அது கொஞ்சம் சிக்கலானது
பிரிவினையின் பொழுது பஞ்சாபிய ராஜஸ்தானிய குஜராத்திய எல்லையில் ஏராளமான குடும்ப உறவுகளை எல்லைகோடு பிரித்தது
உறவுகள் இருபக்கமும் நின்று இன்றளவும் வாகா, சியால்கோட் எல்லையில் கதறிகொண்டிருக்கும்
இந்தியாவில் யாருக்கும் வாய்காத சோகம் அவர்களுக்கு உண்டு
உறவினர் திருமணமோ சாவோ இல்லை விஷேசமோ எல்லாவற்றுக்கும் விசா, பாதுகாப்பு சோதனை என எல்லாம் கடக்கும் கொடிய வாழ்வு அவர்களுடையது
இந்த சபிக்கபட்ட சமூகம் பாகிஸ்தானில் சிறுபான்மை, இந்தியாவில் பெரும்பான்மை
குறிப்பாக லாகூரில் இந்த தொடர்புகள் மிக அதிகம்
இவர்களின் சிக்கலை புரிந்து கொண்ட இருநாட்டு அரசுகளும் போக்குவரத்துக்கு உதவி செய்தன, வாஜ்பாய் பஸ் விட்டது கூட அப்படித்தான்
சிக்கலான காலங்களில் இந்த போக்குவரத்தை நிறுத்தும் பாகிஸ்த்தான் இப்பொழுதும் செய்திருக்கின்றது, நிச்சயம் இது அநியாயம்
அவர்கள் திட்டம் என்னவென்றால் பாகிஸ்தானில் உறவுகளை கொண்ட இந்திய சமூகத்தார் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது
ஆனால் எக்காலமும் இந்தியாவின் பக்கம் இருக்கும் அந்த உறவுகள் இப்பொழுதும் தேசத்தின் பக்கமே நிற்கின்றன
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகும், ஆகட்டும். அவர்கள் இன்னும் படுபயங்கர எதிர்ப்பில் இறங்க கூடும்
ஆம், தங்களின் மிக முக்கிய துருப்பு சீட்டான காஷ்மீரில் இந்தியா அடித்து ஆடும்பொழுது அப்படித்தான் செய்வார்கள்
ஆச்சரியமில்லை
ஆனால் இந்தியாவின் நியாயத்தை புரிந்துகொண்ட உலகநாடுகள் தர்மபடி இந்தியாபக்கம் நிற்கின்றன, அமெரிக்கா ஒதுங்கிற்று
சீனா பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பீஜிங் சென்றும் கூட வரவேற்கவில்லை அவர்களும் ஒதுங்குகின்றார்கள்
மிக எதிர்பார்க்கபட்ட நாடு இலங்கை, நிச்சயம் ஈழ சிக்கலுக்காக அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சரிவார்கள் என எதிர்பார்க்கபட்டது அவர்களும் அமைதி
தன் பக்கம் யாரும் இல்லாததை உணர்ந்துகொண்ட பாகிஸ்தான் ஒருவித விரக்தியில் திரிகின்றது, திரியட்டும்
தர்மங்களும் நியாங்களும் தார்மீகமும் இந்தியாவிடம் இருப்பதால் இத்திருநாடு தன்போக்கில் கம்பீரமாக நடை போடுகின்றது