இந்திபடம் வேறு இந்திவேறு

இந்தியினைத்தான் எதிர்ப்போம் இந்தி படங்களை எதிர்க்கமாட்டோம் உபிக்கள் புதிய உருட்டு

1970களின் அந்திம காலங்களில் இந்திபாடல்களை விரட்டி அடித்தவர் இளையராஜா என அவரை கொண்டாடியதில் உபிக்களின் பங்கு அதிகம், திமுக தலைவர்களே அதனை அடிக்கடி சொல்வார்கள்

ஆனால் இன்று எல்லாமே தலைகீழ்

சரி, இந்திபடம் வேறு இந்திவேறு என்பார்கள், ஆனால் இந்திபடத்தை எப்படி தமிழாக்கம் செய்வார்கள் என்றால் இந்திபடித்து தமிழக்காம் செய்வார்களாம்

அது இந்தி திணிப்பு ஆகாதாம், இந்தியினை இவர்கள் விரும்பி தழுவிய “தவிப்பு” என்றாகுமாம்

இந்திக்காரன் ஏன் தமிழ்படிக்கவில்லை என்பவர்கள் உதயநிதி ஸ்டாலினின் படங்களை ஏன் இந்திக்காரர்கள் தமிழ்படித்து இந்திக்கு மாற்றவில்லை என கேட்டால் வாயே திறக்கமாட்டார்கள்.

அதெல்லாம் ஒரு வகையான “மாடல்..”