இந்தியாவிடம் இதுபற்றி வேறு ஏதோ திட்டமிருக்கின்றது

இந்தியா இனி செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகனைகள் சோதனையினை கொஞ்சநாளைக்கு செய்வதில்லை என அறிவித்திருக்கின்றது

இந்தியாவின் ஏசாட் ஏவுகனை கடந்தவருடம் சோதிக்கபட்டு முன்னூறு கிமி தொலைவில் இருந்த டம்மி செயற்கோளை தகர்த்து உலகை அசத்தியது. இந்த ஏவுகனையின் மொத்த பலம் ஆயிரம் கிமீ என உறுதிபடுத்தபட்ட நிலையில் அச்சோதனை இன்னும் தொடரும் என எதிர்பார்த்தது

இந்தியா இனி சோதனை தேவையில்லை எம் தொழிநுட்பம் மேல் நம்பிக்கை உண்டு இதனால் தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு களமிறங்கிவிட்டோம் என சொல்லிவிட்டது

சரி, தொழில்நுட்பத்தை மேம்படுத்திவிட்டு சோதீப்பீர்களா என்ற கேள்விக்கு புன்னகை மட்டும் பதிலாக சொல்கின்றா டி.ஆர்.டி. ஓ தலைவர் சதீஷ் ரெட்டி

இந்தியாவிடம் இதுபற்றி வேறு ஏதோ திட்டமிருக்கின்றது, பார்க்கலாம்