இந்தியாவினை ஈரான் ஏன் மத்தியஸ்தம் பேச அழைக்கின்றது
இந்தியாவினை ஈரான் ஏன் மத்தியஸ்தம் பேச அழைக்கின்றது, இந்தியா அமெரிக்காவினை எப்படி பேச்சுவார்த்தைக்கு இழுத்துவரும் என நம்புகின்றது என்றால் விஷயம் இதுதான்
இந்தியா ஈரானில் சபஹர் என்றொரு துறைமுகம் கட்டுகின்றது, சரி இருக்கட்டும் அதற்கு முன் சில விவகாரங்களை பார்க்கலாம்
ஆப்கன் என்பது நிலங்களால் சூழபட்ட நாடு, ஆப்கனில் அமெரிக்க பொம்மை அரசு இருக்கின்றது ஆப்கனுக்கு அங்கு தர்ஜிக், உஸ்பெக், தஜிகிஸ்தான் என சில எண்ணெய் வள நாடுகள் இருக்கின்றன
இப்பொழுது ஆப்கனுக்கு சென்று அந்நாடுளுக்கு செல்லவேண்டும், இருக்கும் ஒரே வழி பாகிஸ்தான்
ஆம் கராச்சிக்கு சென்று அங்கிருந்து கைபர் போலன் வழியாக ஆப்கனை அடைந்து வியாபாரம் செய்ய வேண்டும்
இங்குதான் டோல்கேட் போடுகின்றது பாகிஸ்தான்
ஆம், அவர்கள் ஊடாக போக்குவரத்து நடத்த உலகநாடுகள் பெரும் கப்பம் கட்டுகின்றன, இன்னும் திருவோடு ஏந்தாமல் பாகிஸ்தான் தப்பிக்க இந்த போக்குவரத்து கொள்ளைதான் வருமானம்
மிகபெரும் வருமானம் அது
இந்தியா இதை லாவகமாக உடைக்கின்றது

அதாவது கராச்சி வழியாக ஆப்கனை அடைவதை விட ஈரான் வழியாக ஆப்கனை அடையலாம் எனும் புதுவழி காட்டுகின்றது
நிச்சயம் ஈரான் அமெரிக்காவினை அப்பகுதியில் அனுமதிக்காது என்றாலும் அதை காட்டி மற்ற நாடுகளிடம் பெரும் வியாபாரம் செய்யலாம், அமெரிக்க பினாமி என்றால் யாருக்கும் தெரியமல் அனுமதிக்கலாம்
பாகிஸ்தானின் டோல்கேட்டினை ஈரான் போடலாம்
சபஹர் துறைமுகம் மற்றும் சாலை பணிகளில் இந்திய முதலீடு இருப்பதாலும் இது ஓரளவு மாற்றுதிட்டம் என்பதாலும் இந்தியாவினை பகைக்க அமெரிக்கா விரும்பாது
இந்தியாவும் பாகிஸ்தானை சுற்றி தன் பிடியினை இறுக்கும்
இம்மாதிரி இந்திய பிடி ஈரானில் இருப்பதாலும் இன்னும் பல காரணங்களாலும் இந்தியாவின் உறவு மகா அவசியம் என கருதுகின்றது ஈரான்
துல்லியமான கணக்கு இது.
இதனால் ஈரான் சொல்லவரும் கணக்கு இதுதான், “இந்தியா எம் கூட்டாளி , எது பேசவேண்டுமானாலும் அவர்களிடம் சொல்லுங்கள் கேட்டு கொள்கின்றோம்
நாம் புதுபாதை திறக்க போகின்றோம் அதன் மூலம் பாகிஸ்தான் வருமானத்தில் மண் அள்ளி போட்டு மூடபோகின்றோம்.”