இந்தியாவினை ஏன் ஈரான் இழுக்க பார்த்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

ஈரான் அமெரிக்க விவகாரத்தில் இந்தியாவினை ஏன் ஈரான் இழுக்க பார்த்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

ஈரானின் அவசர எரிபொருள் ரிசர்வ் அல்லது சேமிப்பு கிடங்கு இந்தியாவில்தான் உள்ளது. இன்னொன்று இன்றைய தேதியில் அமெரிக்காவுடன் பேசும் அளவு ஈரானுக்கு நெருக்கமான ஒரு சக்தி இந்தியா தவிர இல்லை

சக இஸ்லாமிய நாடுகள் என்றாலும் சன்னி நாடுகள் வராது

ரஷ்யாவும் சீனாவும் பேசலாம், பேசினால் அமெரிக்காவுக்கு கோபமே மிஞ்சும்

இன்றைய தேதியில் அனைவருக்கும் பொதுவான ஒரு பலமான நாடு என உலகம் இந்தியாவினை நம்புகின்றது, அதை ஈரானும் நம்புகின்றது

ஆம் இது இந்து பூமிதான் ஆனால் எந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பவுத்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என உலகிற்கு சொல்லி அகில உலகில் மின்னுகின்றது இந்தியா

மோடி வெட்டியாக கோட் சூட் போட்டு ஊர் சுற்றினார் என சொன்ன பயலை எல்லாம் இழுத்து வைத்து அடித்து இதை சொல்லி விளக்க வேண்டும்

ஆம், அந்த ஓயாத உலக சுற்றல்தான் இந்தியா சமாதானத்தை விரும்பும் இந்துநாடு எனும் கவுரவத்தை பெற்றிருக்கின்றது

உலகம் இப்பொழுது வேறுமாதிரி யோசிக்கின்றது

கத்தோலிக்க கிறிஸ்தவ அணி, பிரிவினை கிறிஸ்தவ அணி, ஷியா அணி, சன்னி அணி பௌத்த நாட்டு அணி என பிரியும் உலகில் ஒரு இந்துநாடு இருப்பது நல்லது போல என யோசிக்கின்றது

தர்மமும் நியாயமும் அதுதான்

இந்தியா அந்த இந்துநாடு உலகின் எல்லோருக்கும் பொதுவானது, யாருக்கும் எதிரி அல்ல என்ற கோணத்தில் நகர்கின்றது

இந்த தர்மபூமி உலகுக்கு மகா ஆச்சரியங்களை கொடுக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது