இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பு நன்றாகவே இருக்கின்றது
ஆம் சிரிய இஸ்லாமியரை விட, ஆப்கன் இஸ்லாமியரைவிட , ரொஹிங்கியா இஸ்லாமியரை விட பாலஸ்தீன் கரை இஸ்லாமியரை விட,
செசன்யா பகுதி இஸ்லாமியரை விட , ஆப்கன் இஸ்லாமியரை விட, பலுசிஸ்தான் எல்லை இஸ்லாமியரை விட, சன்னி நாடுகளின் ஷியா இஸ்லாமியரை விட, ஷியா நாடுகளின் சன்னி இஸ்லாமியரை விட,
ஈராக்கிய இஸ்லாமியரை விட, உய்க்குர் இஸ்லாமியரை விட, ஆப்ரிக்க நாடுகளின் இஸ்லாமியரை விட இன்னும் பல நாடுகளின் இஸ்லாமியரை விட
அதாவது எங்கெல்லாம் இஸ்லாமிய நாடாக இருந்தாலும் தங்களுக்குள் அடித்துகொள்ளும் நாடுகளை விட, எங்கெல்லாம் சிறுபான்மை இனமாக இருந்தாலும் இஸ்லாமியர் பாதுகாப்பில்லாமல் வாழும் நாடுகளை விட இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பு நன்றாகவே இருக்கின்றது
அந்த நாடுகளில் இல்லா உரிமையும் சலுகையும் இந்நாட்டு இஸ்லாமியருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கும் கொடுக்கபட்டிருக்கின்றது
இறுக்கமான முழு இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் இந்நாட்டு இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை
முழு மகிழ்ச்சிக்கான சுதந்திரம் கொடுக்கபட்டிருக்கின்றது
இவ்வளவுக்கும் உலகில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இரண்டாவது நாடு இந்தியா..
ஆர்.எஸ்.எஸ் சில சர்ச்சைகளை சந்தித்த அமைப்பு எனினும் அவர்களின் இந்த கூற்று மிக மிக உண்மையானது,

உலகத்தின் குரலும் இதுவேதான்