இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்
இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் -உளவுத்துறை எச்சரிக்கை
விஷயம் எளிது
பாகிஸ்தானில் இந்திய குண்டுவீச்சில் கொல்லபட்டவருக்காக மிக பெரும் பதிலடியினை அந்த கோஷ்டி நிச்சயம் கொடுக்க முயற்சிக்கும், இது எதிர்பார்த்தது
காரணம் அவர்கள் அங்கு இழந்திருக்கும் இழப்பு மிக கடுமையானது அவர்களால் அதை வெளிப்படையாக சொல்லமுடியாது
அதனால் அதே மாதிரி இழப்பினை இங்கும் ஏற்படுத்த முயற்சிப்பார்கள்
இந்தியா முழுக்க பாதுகாப்பு இன்னும் பலபடுத்தபட வேண்டும் அதைவிட முக்கியம் உளவு தகவல்களும் உளவு தகவல்களும் இன்னும் அதிகம் வேண்டும்
எல்லை பகுதியில் வழக்கமான ஊடுருவலை அவர்களால் செய்ய முடியாதபடி எமிசாட் கடும் பாதுகாப்பை வழங்குவது நல்ல விஷயம்
இன்னும் கடுமையான பாதுகாப்பு மூலம் இத்தேசம் அதை செய்யட்டும்
எல்லை தாண்டிய தாக்குதல் என்பது சாதாரணம் அல்ல, அடிப்பது எளிது
ஆனால் பின்வரும் தொடர்ச்சியான மிரட்டல்களை சமாளிப்பது கடினம்
அமெரிக்காவும் இஸ்ரேலும் அதில் கைதேர்ந்தவை, தங்கள் பாதுகாப்பை வலுபடுத்திவிட்டே அவை எல்லை தாண்டி அடிக்கின்றன
இந்தியா இவ்வளவு நாளும் அந்த சவாலை எடுக்கவில்லை இப்பொழுது மோடி அரசு அந்த சவாலை எடுத்திருக்கின்றது
நிச்சயம் இது எளிதில் முடியாது, அலை அலையாக அவர்கள் முயற்சி செய்து கொண்டேதான் இருப்பார்கள்
இனி மிக கடுமையான பாதுகாப்புகளை இஸ்ரேல் அமெரிக்கா போல் செய்யாமல் இந்திய பாதுகாப்பு நிலையானதாய் இராது
எனினும் பாதுகாப்பு அமைப்புகள் அதை வலுவாக செய்யும் என நம்புகின்றோம்
பாம்பு புற்றை இடித்தால் பாம்பை அடிக்கும் அல்லது மயக்கும் வித்தை தெரிந்திருக்க வேண்டும்
இந்தியாவுக்கு அது தெரிந்ததா இல்லையா என்பது இனிதான் தெரியும்