இந்தியாவில் மோடியினை கொரோனா நிரந்தரமாக பதவியில் அமர்த்திவிட்டது.
உலகில் பல ஆரூடங்கள் வர ஆரம்பித்துவிட்டன
அதாவது கொள்ளை நோய்கள் என்பது ஐரோப்பாவுக்கு புதிதே அல்ல, முன்பெல்லாம் அடிக்கடி வரும். அதுவும் ஆசியாவுக்கு போர், வியாபாரம் என அவர்கள் வந்தபின் அடிக்கடி வந்தன
இந்த லாக் டவுண், எல்லை மூடல் , சர்ச்சைகள், கொத்து சாவுகள் எல்லாம் அவர்களுக்கு பழக்கபட்டவை. ஒன்று கொள்ளை நோயால் நடக்கும் இல்லை போர்களால் நடக்கும்.
அன்பின் வடிவான கிறிஸ்தவ மத நாடுகள் என்றாலும் அவர்களுக்குள் வெட்டி கொண்டும் சுட்டு கொண்ட செத்தும் கணக்கும் முப்பது முக்கோடிகளையும் தாண்டும்.
அப்படியே வியாபாரம் என கீழை நாடுகளுக்கு வந்து செல்லும் அவர்கள் ஏதோ ஒரு நோயினை பரப்பினர், சீதோஷ்ணம் உணவு இன்னும் பல மாறுதல்கள் அந்த நோய்களை பரப்பின.
இடம் விட்டு இடம் மாறும்போது வரும் நோய்கள் எளிதில் ஐரோப்பாவில் வியாபாரிகள் வடிவில் புகுந்தன
சுருக்கமாக சொன்னால் ஆசியாவின் வெப்பமண்டல நோய்கள் ஐரோப்பாவின் சீதோஷ்ணத்துக்கு குத்தாட்டம் போட்டது
வெள்ளையன் இங்கே அம்மையினை ஒழித்தான், அம்மையின் பாட்டியினை ஒழித்தான் என் திராவிட கும்பல் அடிக்கடி சொல்லும் , ஏன் ஒழிக்க முனைந்தான்? அவனுக்கு பொதுநலமா? அதற்கு முன் இங்கு மக்கள் வாழவே இல்ல்லையா?
அவனுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?
அதை ஒழித்தால்தான் அவனால் இங்கு பயமின்றி வரமுடியும், வியாபாரம் போர் என சுரண்ட முடியும். இதனாலே இங்கிருக்கும் நோய்களை ஒழிக்க பாடுபட்டானே அன்றி, பொதுநலம் எல்லாம் அல்லவே அல்ல..
கொள்ளை நோய்களின் முடிவிலே அங்கு பல சாம்ராஜ்யங்கள் மாறியிருகின்றன
போப்பாண்டவர் சிலுவை போரின் முடிவில் பரவிய கொள்ளை நோய்களிலே பலமிழந்திருக்கின்றார்
14ம் நூற்றாண்டில் பரவிய பிளேக் நோயின் முடிவிலே போப் சரிந்து, ஐரோப்பாவில் புரட்டஸ்டேண்டுகள் எழுந்து என்னவெல்லாமோ செய்திருக்கின்றன
ஸ்பானிஷ் புளூ எனும் கொடும் நோய் செய்த மிக பெரும் உயிரழப்பின் விளைவே பலமிழந்த ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு ஐரோப்பாவிலும் பரவியது
அந்த நோயின் விளைவே ஜெர்மனியின் படுதோல்வியும் ஹிட்லரின் எழுச்சியும்
ஸ்பானிஷ் புளுவுக்க்கு பின் ஐரோப்பாவினை ஆட்டும் மிகபெரிய நோய் கொரோனா, இதனால் அரசுகள் பலமிழக்கும், பலமிழந்து அடங்கி கிடக்கும் சக்திகள் அதிகாரம் பெறலாம்
எதுவும் கொரோனா முடிவில் நடக்கலாம், கொரோனாவால் அதிகாரமும் ராணுவமும் வீழ்ந்தால் ஆட்சி தானாய் மாறும்
ஏற்கனவே வந்த கொள்ளை நோய்களை போல கொரோனாவும் ஐரோப்பாவில் காட்சிகளை ஆட்சிகளை மாற்றுமா என ஒரு எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழுந்துள்ளது, அதற்கான வாய்ப்பினையும் மறுக்க முடியாது
ஆனால் இந்தியாவில் மோடியினை கொரோனா நிரந்தரமாக பதவியில் அமர்த்திவிட்டது என்பதுதான் இப்போதைய உலக ஆச்சரியம், ஆம் கொரோனாவால் உலகின் எந்த அரசும் சரியலாம் ஆனால் மோடி அரசு உறுதிபெற்றுகொண்டே இருக்கின்றது