இந்தியா அதில் சிக்கவில்லை

அமெரிக்க சீன பொருளாதார ஒப்பந்தம் முடிந்தபின் அமெரிக்கா ஒரு விஷயத்தை மெல்ல கசிய விடுகின்றது, எனினும் இந்தியா அதை புன்னகைத்தபடியே கடந்து செல்கின்றது

இந்தியா அதில் சிக்கவில்லை

ஆம், முன்பு டிரம்ப் மோடியுடன் சந்திப்பு நடத்தியபொழுது, “சீனாவோடு உங்களுக்கு எல்லையே வராதே, பின் என்ன எல்லை தகறாது” என டிரம்ப் கேட்டதாகவும் அதற்கு மோடி பதிலேதும் சொல்லாமல் சிரித்துவிட்டு வந்துவிட்டார் என்றும் தகவல்கள் கசிகின்றன‌

டிரம்ப் விவரம் இல்லாமல் சொல்லவில்லை, விஷயம் உள் அர்த்தம் மிக்கது

அதாவது இந்தியா திபெத் நாட்டோடுதான் தன் எல்லையினை பகிரும், திபெத்தினை சீனா ஆக்கிரமித்தபின்பே சீன இந்திய எல்லை தகறாறு வந்தது, டிரம்ப் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகலை ஏற்படுத்த திபெத்துக்கும் இந்தியாவுக்குமே எல்லை உண்டு என்ற வார்த்தையினை பிடுங்கபார்த்தார்

மோடி இடம் கொடுக்கவில்லை

சில பதர்கள் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா சீனாவுடன் ஏன் மோதவில்லை என கேட்கும்

சரிக்கு சமமான எதிரியுடன் அறிவாளி மோதமாட்டான், ஆனானபட்ட அமெரிக்காவே ரஷ்யாவுடன் மோதாது

சில இடங்களில் ராஜதந்திரம் அவசியம், மோடி அதை அட்டகாசமாக செய்திருக்கின்றார்