இந்தியா அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது

இந்தியா அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது

அதாவது அமெரிக்க போயிங் விமான கம்பெனி சில ராணுவ விமானங்களை செய்யும் அதை அமெரிக்க அரசின் ஒப்புதலுடனே செய்து அவர்களுக்கே கொடுக்கும்

இனி இந்திய அரசுடனும் சேர்ந்து சில விமானங்களை அது தயாரிகட்டும் என பச்சைகொடி காட்டிவிட்டது அமெரிக்கா

இந்திய அரசு தன் நாட்டு தனியார் நிறுவணங்களும் அரசின் மேற்பார்வையில் போயிங்குடன் இணையலாம் என சொல்லிவிட்டது

2025ல் இந்தியா மிகபெரும் ஆயுத ஏற்றுமதி நாடாக திகழும் இலக்கினை எட்ட செய்யபட்டிருக்கும் ஏற்பாடு இது

இதனால் பெரும் வேலைவாய்ப்பு பெருகும், பலதரபட்ட தொழில் உருவாகும்

ஆனால் இங்கு எப்படி கிளம்புவார்கள் தெரியுமா? , அம்பானி அதானிக்கு விமானபடையினை விற்றுவிட்டார் மோடி

உண்மையில் ஏராளமான இந்திய கம்பெனிகள் இதனால் பலன்பெரும் பல வேலைவாய்ப்பு உருவாகும் என்பதுதான் நிஜம்

ஏற்கனவே டாட்டா அமெரிக்காவுடன் இணைந்து ஹெலிகாப்டர் செய்கின்றது , கப்பல் கட்டுதலில் எல் & டி நிறுவணம் இணைந்திருக்கின்றது

இதெல்லாம் சொல்லமாட்டார்கள், அம்பானியும் அதானியும் குஜராத்தி என்பதுதான் இவர்கள் பார்வை

இந்தியா இப்பொழுதெல்லாம் மிகுந்த தொலைநோக்கோடு திட்டமிடுகின்றது, 2025ல் மிகபெரும் ஆயுத உற்பத்திநாடாக மாறினாலும் ஆச்சரியமில்லை

ஆயுத விற்பனை பெரும் பணமாக இருந்தும் முந்தைய காங்கிரஸ் அரசு ஏன் செய்யவில்லை? வாங்க மட்டும் செய்தார்கள்?

இதை பற்றி கேட்டால் நாம் சங்கி..