இந்தியா என்ன கிழித்தது என சொல்லும் கூட்டம் எக்காலமும் உண்டு
இந்தியா என்ன கிழித்தது என சொல்லும் கூட்டம் எக்காலமும் உண்டு, எதிலெல்லாம் இந்தியா வெல்லுமோ அப்பொழுது கம்மென்று இருப்பதும் எங்காவது சறுக்கினால் இந்த நாடே இப்படித்தான் என்பதும் அவர்கள் சித்தாந்தம்
வெள்ளையன் இந்நாட்டை வளர்த்தான் என்பதல்ல உண்மை, அவன் பொருளுக்கு இதை ஒரு சந்தையாக்கினான், ஆடை கூட அவன் துணியினைத்தான் வாங்க வேண்டும் என்ற அளவு ஏன் உப்புக்கே அவன் வைத்ததுதான் விலை என்ற அளவு இருந்தது அவன் கொடுமை
பெரும் தொழிற்சாலையின் மூலம் எதுவும் இங்கு அமையாதவாறு பார்த்துகொண்டான், தொழில்நுட்ப கல்வியும் அவன் காலத்தில் இல்லை, சும்மா ஆங்கிலம் கொஞ்சம் கணக்கு என அவன் ஆளஎது தேவையோ அதை மட்டும் செய்தான்
ரயில் நிலையங்களும் சாலைகளும் அவன் நலனுக்காக அமைக்கபட்டது, இந்தியாவின் நலன் இரண்டாம் பட்சமே
சுதந்திர இந்தியாவினை சுரண்டி போட்டும் உடைத்து போட்டுமே அவன் வெளியேறினான்
அவன் வெளியேறிய பின்பு பிரமாண்ட அணைகள் கட்டி விவசாயம் பெருக்கினோம், வெள்ளையன் காலத்தில் பர்மா அரிசி எல்லாம் இறக்குமதியானது அதை விரட்டினோம்
ஆலைகள் அமைத்தோம் நம் நாடே நமக்கான ஆடைகளை செய்தது , இன்று காணும் விதவிதமான ஆடைகள் எல்லாம் இந்நாட்டு தயாரிப்பு
கொஞ்சம் கொஞ்சமாக எழும்பினோம்
வெள்ளையன் கால பள்ளி கல்லூரி என்ன? நாம் அமைத்திருக்கும் கணக்கு என்ன?
வெள்ளையன் கால தொழிற்சாலை என்ன? நாம் அமைத்திருப்பது என்ன?
ஒவ்வொன்றாக தன்னிறைவு பெற்றோம் உணவு முதல் சகல் விஷயங்களிலும் முன்னேறினோம்
வெள்ளையன் கொடுக்காத வளர்ச்சியினை நாமே சுதந்திர இந்தியாவில் பெற்றோம்
கல்வி, மருத்துவம், வான்வெளி , கடல் என எல்லா திசையிலும் பாய்ச்சல் காட்டினோம்
இந்த சுர்ஜித் இறந்துவிட்டான் என்பதற்காக நம்மிடம் ஒன்றுமே இல்லை என்றாகாது, இச்சிறுவன் இறக்க பல காரணங்கள், நிச்சயம் இந்தியாவின் தொழில்நுட்பம் அல்ல
கண்களை மூடி அமைதியாக சிந்தியுங்கள். இந்நாடு அடைந்திருக்கும் மாபெரும் முன்னேற்றமும் வளர்ச்சியும் கண்களுக்கு தெரியும்
இங்கு எல்லாமும் இருகின்றது, வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கின்றது
சிங்கப்பூரிலும் சீனாவிலும் இருக்கும் ஒன்றே ஒன்று இங்கு இல்லை, அதுதான் அவசிய தேவை
ஆம் , நாட்டுக்காக ஏதும் செய்யாமல் பொய் சொல்லி கட்சி அரசியல் பிரிவினைவாதம் நாட்டை பற்றிய அவதூறு பேசி திரிபவனை தூக்கி போட்டு மிதிக்கும் சட்டம் மட்டும் இல்லை
அதுதான் மகா அவசியம், அச்சட்டம் மட்டும் வந்தால் அதன் மூலம் இங்கு குழப்பவாதிகளை முடக்கி போட்டு மிதித்தால் எல்லாம் சரியாகும்