இந்தியா ரஷ்யாவுடன் ஆயுதம் வாங்க கூடாது என்பது என்ன வகை?
உலகெல்லாம் தன் ஒற்றை கொடி பறக்க வேண்டும், உலக நாடுகள் தன் காலடியில் இருக்க வேண்டும் என்ற அமெரிக்க கனவு இப்பொழுது வெறிபிடித்த கட்டத்தை எட்டியுள்ளது
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை விதிக்கபடும் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது
இது அப்பட்டமான அடக்குமுறை, பகிரங்கமான ஏகாதிபத்தியம்
இந்தியா இறையாண்மை உள்ள நாடு , சுதந்திர நாடு தனக்கு தேவையான ஆயுதங்களை எந்த நாட்டில் இருந்தும் வாங்கும் உரிமை அதற்கு உண்டு
நாம் பணம் கொடுக்கின்றோம், நாம் வாங்குகின்றோம், இடையில் இவர்கள் யார் என கேட்க இந்திய தலமைக்கும் துணிவில்லை
அமெரிக்கா உலகெல்லாம் ஆயுதம் விற்கலாம் , அவர்களின் கூட்டாளிகளான பிரிட்டன், இஸ்ரேல் எல்லாம் விற்கலாம்
ஆனால் இந்தியா ரஷ்யாவுடன் ஆயுதம் வாங்க கூடாது என்பது என்ன வகை?
இந்தியா இதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும், நாட்டின் கவுரவட்தை சீண்டி பார்க்கும் இம்மாதிரி விஷயங்களை சும்மா விட கூடாது
மோடி துணிச்சலாக சாடட்டும், நிர்மலா சீத்தாராமன் இதற்கு கண்டனம் தெரிவித்தே தீரவேண்டும்
ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகனை வாங்க அவர் கைச்சாத்திட்ட பின்பே இப்படி மிரட்டுகின்றது அமெரிக்கா
இந்திய குடிமகனாக அமெரிக்காவின் அடாவடிக்கு கண்டனங்கள்
பிரதமரும் இந்திய குடிமகனாக இருந்தால் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்கட்டும்