இந்தியா வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா

Image may contain: 1 person, smiling, close-up

இந்தியா வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா

அதாவது அமெரிக்க தொழில்முனைவோர் குழு இந்தியாவில் சுற்றுபயணம் செய்து ஒரு கூட்டம் ஐதரபாத்தில் நடத்துகின்றதாம், அதற்கு இவாங்கா டிரம்ப் தலைவராம், மோடி உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொள்ளும் அந்த கூட்டம் இன்று நடக்கின்றது

எத்தனையோ பெரும் பொருளாதார புலிகள், தொழிலதிபர்கள் அமெரிக்காவில் இருக்கும்பொழுது இவாங்கா எப்படி தலைவரானார்?

ஆக ஒரு வாரிசு உதயமாகின்றது, அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இவாங்காவினை அமர்த்த டிரம்ப் கனவு காண ஆரம்பித்தாயிற்று என்பது புரிகின்றது

நல்ல வேளையாக இவாங்கா தமிழகம் வரவில்லை, ஒருவேளை வந்திருந்தால் “புரட்சி தலைவிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர் வாழ்ந்த மாநிலத்தின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசி, அம்மா ஆசியுடன் அரசியலில் இறங்குகின்றார் இவாங்கா..” என அந்த கூட்டம் நிச்சயம் கிளம்பும்.

இப்படியே கூசாமல் சொல்வார்கள், வெட்கமே பட மாட்டார்கள், அவர்கள் பயிற்சி அப்படி அதோடு விடுவார்களா என்றால் இல்லை,

” பாருங்கள் இவாங்கா, அமெரிக்காவினை விட தமிழகத்தில் எங்கள் ஆட்சியில் 
எப்படி சாலையும், மற்ற வசதிகளும் இருக்கின்றது, இதனை எல்லாம் நீங்கள் உலகெல்லாம் எடுத்து சொல்லவேண்டும் ஐநா சபையில் சொல்லி அம்மா படம் திறக்க வைக்க வேண்டும்..” என சிரிக்காமல் சொல்வார்கள்

நல்லவேளையாக ஐதராபாத்திற்கு இவாங்கா சென்றுவிட்டதால் சிக்கல் இல்லை