இந்திய உளவுதுறையில் அந்நிய சக்திகள் ஊடுருவியிருக்கலாம் என அஞ்சும் நேரமிது
ஒரு விஷயத்தை நாம் உறுதியாக சொல்கின்றோம்
ஈழத்தில் யுத்தம் என்பது முதலிலே அதாவது 1980களிலே முடிந்திருக்கும், பிரபாகரனை எல்லாம் மூட்டை பூச்சியினை போல என்றோ நசுக்கியிருப்பார்கள்
பஸ்தியான் பிள்ளை எனும் போலிஸ் அதிகாரியினை புலிகள் கொன்ற தொடக்க காலத்திலே மொத்த கோஷ்டியினையும் இலங்கை அரசால் துடைத்திருக்க முடியு
ஆனால் இந்திய உளவுதுறை உள்ளே புகுந்து இந்திய நலனுக்காக ஆடியது, அது தலையிட்ட பின்பே அழிவுகள் கூடின கடுமையான அழிவுகள்
விடுதலைபுலிகளை காப்பதில் இந்திய உளவுதுறை கருத்தாய் இருந்தது, பத்மநாபா கொலைக்கு பின்னும் புலிகளை அது நம்பியது
ராஜிவ் கொலையில் புலிகள் இல்லை என முதலில் சொன்னதும், கார்த்திகேயனுக்கு ஒத்துழைக்க மறுத்ததும் இந்திய உளவுதுறையே,
அந்த கிட்டுவினை நம்பி அவன் இவர்களுக்கு பட்டை நாமம் சாத்தி ராஜிவினை கொன்றது தெரிந்ததும் தன் வியர்வையினை துடைத்து கொண்டது
ராஜிவ் கொலைக்கு பின் உளவுதுறையின் பார்வை மாறினாலும் புலிகள் அவர்களுக்கு தேவையாய் இருந்தனர்
புலிகள் இந்தியாவில் யாரையும் கொல்லட்டும் எதையும் செய்யட்டும் ஆனால் தங்கள் கட்டுபாட்டில் இருக்கவேண்டும் என விரும்பியது உளவுதுறை, அதாவது புலிகள் நாடு அடையவும் கூடாது அதே நேரம் அழிந்துவிடவும் கூடாது, இலங்கை அரசுக்கு ஒரு தலைவலி இருந்தாக வேண்டும், என அது திட்டமிட்டு செயல்படுத்தியது
2009ல் கூட புலிகளை காக்க சில நகர்வுகளை செய்தது இந்திய உளவுதுறை ஆனால் இந்திய ராணுவம் 1987ல் நடந்த கசப்பான அனுபவங்களை மனதில் கொண்டு முறைக்க பின்வாங்கிற்று
அந்த உளவுதுறையால் இலங்கையில் நடந்த அழிவு கொஞ்சமல்ல, அது நினைத்திருந்தால் பத்மநபா முதல் பலரை காத்திருக்கலாம், அழிய விட்டது இவர்களே
4 பேர் செத்து அந்த போராட்டம் முடிய வேண்டிய இடத்தில் 4 லட்சம் பேர் செத்து ஏக அழிவுகள் ஏற்பட இந்திய உளவுதுறை தலையீடும் அது செய்யதெரியாமல் செய்த வேலைகளுமே காரணம்
அந்த உளவுதுறை 1980ல் இருந்து சொதப்பி 2009ல் சகலமும் முடிந்தபின் இனி ஈழகுரல் தமிழகத்தில் இல்லை என்ற நிலை வந்தபொழுது தலையில் கைவைத்தது, ஆம் இலங்கைக்கு அவர்கள் கையில் எடுத்து காட்ட ஆயுதமில்லை
முதலில் அதாவது 1980களில் எல்லா ஈழ போராளிகளும் அறிவோடு இருந்தனர், ஒருவன் மட்டுமே கொஞ்சமும் அறிவே இல்லாமல் அப்பாவி முரடனாய் இருந்தான், அவனை திட்டமிட்டு வளைத்த இந்திய உளவுதுறை அவனாலே அங்கு கடும் அழிவுகளை ஏற்படுத்தியது
அவனோ அமெரிக்க ஆளாகவும் இருந்தான் என்பதை அமைதிபடை காலத்தில்தான் இந்திய உளவுதுறை அறிந்தது அதற்குள் எல்லாமும் முடிந்தது
ஒரு நாட்டு உளவுதுறை இல்லாமல் எந்த தீவிரவாத அமைப்பும் வளர்வதும் போராடுவதும் சாத்தியமே இல்லை, ஒரு நாடும் அதன் உளவுதுறையும் எல்லா தீவிரவாத அமைப்புக்கு பின்னாலும் உண்டு
பின்லேடனை வளர்த்து அமெரிக்கா பட்டபாட்டுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது பிரபாகரனை வளர்த்துவிட்டு இந்தியா கையினை சுட்டு கொண்டது.
ஈழத்தில் அப்படி இருந்தது இந்திய உளவுதுறையே, ஆனால் புலிகள் பல நாட்டு உளவுதுறைகளுக்கும் தலையாட்டி இந்திய உளவுதுறை தலையில் மிளகாய் அரைத்தது தனி கதை..
அந்த அறிவுகெட்ட முரடனை வளர்த்தது இந்திய உளவுதுறை அவனே பிரபாகரன், அவனால் அழிந்தது ஈழம்
2009ல் இலங்கை அரசை மிரட்ட இனி தமிழகத்தில் ஒரு அரைபயித்திய , அறிவே இல்லாத ஆனால் முரட்டு அரசியல்வாதி அதற்கு தேவைபட்டான்
ஆம் அவன் பிரபாகரன் சாயலில் இருக்க வேண்டும் , சுய அறிவு இருக்க கூடாது, அழிவுகளை பற்றி கவலைபடுபவனாக இருக்க கூடாது
அப்படி கிடைத்தவன் அங்கிள் சைமன், அவன் இந்திய உளவுதுறையின் உருவாக்கம் அதனால்தான் கோவை , நெல்லை, நாகபட்டினம் , ராமநாதபுரம் என ஐ.எஸ் தீவிரவாதிகளை பிடிக்கும் அமைப்புகள் இந்த அந்நியநாட்டு புலி தீவிரவாதியினை கண்டுகொள்வதில்லை
அவன் என்ன பேசினாலும் அவன் பக்கமே செல்வதில்லை,
இந்திய உளவுதுறையின் பாதுகாப்பு இல்லையென்றால் இங்கு பிரபாகரன் படம் பிடித்து கொண்டு இவ்வளவு காலம் சீமானால் சுற்றமுடியாது, கத்த முடியாது,சவால் விட முடியாது
உச்சமாக ராஜிவினை கொன்றது நாங்கள் என பேசமுடியாது
கொழும்பை மிரட்ட இந்திய உளவுதுறைக்கு ஒரு கடிநாய் தேவை, அது கத்திகொண்டே இருக்க வேண்டும்
அப்படி ஈழத்தில் நாய் என நினைத்து ரத்த காட்டேரியினை வளர்த்தார்கள் அது பின் வரம்கொடுத்தவன் கழுத்தையே கடித்தது பின் உலகநாடுகள் எல்லாம் சேர்த்து அடக்கி கொன்றன
இப்பொழுது தமிழகத்தில் விஷ ஊசி போட்டு ஒரு கடிநாயினை சீமான் என வளர்க்கின்றார்கள், இது வெறிநாய்கடியாக பரவும்
பொதுவாக தமிழகத்தில் தங்களுக்கு அரை வோட்டு கூட இல்லா பாஜக காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு திராவிட கட்சிகளும் தமிழ் தேசிய இம்சைகளும் அவர்களுக்குள் அடித்து கொண்டு சாவதில் அலாதி பிரியம்
அந்த அரசியலும் இங்கு வலுசேர்க்கின்றது
இந்திய உளவுதுறையும் இந்திய அரசும் ஈழத்தில் செய்த அதே தவறை தமிழகத்தில் செய்ய துணிந்துவிட்டார்கள், இது தொடக்கத்திலே களையபடாவிட்டால் முள்ளிவாய்க்கால் காஷ்மீர் போல தமிழகமும் மாபெரும் நெருக்கடியினை சந்திக்கும்
இந்திய உளவுதுறைக்கு தமிழகத்தை காக்கும் பொறுப்பு இருப்பதாக கருதினால் கையில் இருக்கும் அந்த நாயின் நாக்கையும் பல்லையும் பிடுங்கட்டும்
இல்லையேல் தமிழக நிலமை மகா மோசமாகும் அது இந்தியாவுக்கும் அதன் ஒருமைபாட்டுக்கும் பன்முக தன்மைக்கும், நிலைதன்மைக்கும் நல்லதல்ல
இந்திய உளவுதுறையில் அந்நிய சக்திகள் ஊடுருவியிருக்கலாம் என அஞ்சும் நேரமிது, சம்பந்தபட்டவர்கள் செய்யவேண்டியதை செய்யாவிட்டால் பெரும் அழிவு நிச்சயம்