இந்திய சுதந்திர வரலாறு : 01
இந்திய தேசத்தின் போராட்டம் என்பதும் அது அடைந்த விடுதலை நீண்டது, அது மறைமுக சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகியிருக்கலாம், இப்பொழுது பரிபூரண சுதந்திரம் நோக்கிய 9 ஆண்டு பயணத்தில் 75 ஆண்டை கடக்கலாம்ஆனால் அது வெள்ளையனுக்கு மட்டும் 200 ஆண்டுகளாய் அடிமையாய் இருந்தது என மட்டும் சொல்வது பெரும் தவறு,
ஒவ்வொரு இந்தியகுழந்தைக்கும் இந்தியனுக்கும் சொல்லபடும் பெரும் அநீதிகிட்டதட்ட யூதர்கள் சந்தித்த இரண்டாயிரம் வருட நீண்ட யுத்தத்தைத்தான் பெரும் போராட்டத்தைத்தான் இந்திய தேசமும் சந்தித்தது,
அந்த வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்ப்பது இந்த 75ம் ஆண்டுவிழா நாட்களில் இந்தியரின் கடமையாகின்றதுஎப்படி இருந்தது இந்திய தேசம்?அன்று ஐரோப்பா காட்டுமிராண்டி தேசமாக இருந்தது, செல்வமோ செழிப்போ சொல்லிகொள்ள கூடிய அளவு பெரும் பெருமையோ அந்த அடையாளமோ அவர்களிட்ம இல்லை
சீனாவும் அரேபியாவும் பண்டைய நாகரீகங்களை கொண்டிருந்தன, அரேபியா என்பது நைல் நதி ஓரத்திலும் யூப்ரடீஸ் டைக்ரீஸ் ஆற்றங்கரையில் மட்டும் வலுவாய் இருந்ததுஇயமயத்துக்கு அப்பால் சீனா இருந்தது அதன் போக்கில் அமைதியாக இருந்தது எனினும் சீனர்களுக்கு இந்தியாமேல் வாஞ்சையும் ஆசையும் அதிகமாக இருந்தது, அவர்களின் கனவு இந்திய தேசமாக இருந்தது
அந்த இந்தியா பெரும் ஆறுகள் ஓடிய செழிப்பான தேசமாக, வளமான மண் உடைய தேசமாக எல்லா வகை வளமும் கொண்ட தேசமாக உலகில் மின்னியது, எல்லா வகை செலவமும் பொன்னும் பொருளும் கலையும் நாகரீகமும் வாழ்வியலும் அதிசயங்களும் கொண்ட நாடாக உலகெல்லாம் அறியபட்டதுநறுமணமென பரவிய இந்தியாவின் புகழ் உலகெல்லாம் எதிரொலித்தது, ஒவ்வொருவருக்கும் இந்தியா கனவு தேசமானதுஇந்தியா என்பது எல்லா நாட்டினராலும் விரும்பபட்ட செல்வந்த நாடு
, இந்த உலகில் அன்று யாரிடமெல்லாம் பெரும் படை உண்டோ அவர்களெல்லாம் இந்தியாவினை நோக்கி வருவது வாடிக்கை, வந்து தங்கள் மதம் கலாச்சாரம் என புகுத்தி வளமான இந்தியாவினை தங்கள் சொத்தாக துடிப்பதும் வழமைஎப்படி அந்த பெரும் இடத்தை இந்தியா பெற்றது?இந்துமதம் எனும் அருமையான வாழ்வியல் முறை அந்த செல்வத்தை ஏற்படுத்தியிருந்தது,
அதே வாழ்க்கை முறை பலமான ராணுவத்தையும் கொண்டிருந்ததுமக்களின் வாழ்வியலோடும் மனவியலோடும் கலந்திருந்த இந்துமத இந்தியா பிறநாட்டு மன்னர்களிடம் இருந்து வேறுபட்டிருந்ததுஇந்துமதத்தின் தன்மையே தனக்கென வைக்காமல் தானம் தர்மம் என மக்களை கொடுக்க வைப்பதும் புது புது ஆலயங்களை பெருக்குவதும், பிரபஞ்ச அருளோடும் ஆசியோடும் உலக உயிர்களுக்கும் தேவையான காரியங்களை மட்டும் செய்வதுஇந்து மன்னர்கள் பெரும்பாலும் தங்களுக்கென வாழவில்லை,
மாபெரும் ஆடம்பரமும் பெரும் பொன்னும் பொருளும் கொண்ட பேராசை வாழ்வும் அவர்களுக்கு இல்லைசாதாரண மலர்களை சூடினர், எளிய ஆடையினை அணிந்தனர், அவர்களின் சபைகள் கூட கோவில்களில்தான் இருந்தன, மன்னனுக்கென பெரும் ஆடம்பரமான மனை இல்லை, ஆனால் காவல் மிகுந்த வீடுகள் இருந்தனமன்னனாலும் அவன் அமர்ந்துதான் உண்டான்,
அக்காலத்தில் இந்துமன்னர்கள் வாழ்வு எளிமையாய் இருந்தது, , எளிமைக்கு காரணம் இந்துமதமாய் இருந்ததுஆம் பணம் ஓரிடத்தில் குவிய இந்துமதம் அனுமதிக்கவில்லை, அது ஆலயங்களை பொதுவிடமாக கொண்டு செல்வங்களை அங்குதான் குவித்தது, குவிந்த செல்வம் மக்களையும் நாட்டையும் அழகாக நகர்த்தியதுஇந்துக்களுகு அனுதினமும் நல்ல வழக்கங்களும் வாழ்வியல் நம்பிக்கையும் உண்டு, அது அடுத்தவனுக்கு கொடுத்துகொண்டே இருக்கும்படி வலியுறுத்தியமதம், இதனால் எங்கும் பெரும் பேராசை அன்று இல்லை, உழைப்பதும் தானம் கொடுப்பதும் ஒவ்வொருவர் கடமையாயின
இதனால் பிச்சைக்காரர் இல்லைஇன்றும் இந்துக்களின் வழிபாடு பல இடங்களில் செலவு பிடித்திருக்கும் காரணம் அதுதான், மானிடன் கையில் பெரும் பணம் சிக்கினால் அது சமூக சீரழிவுக்கும் குழப்பத்துக்கும் வழிவகுக்கும் என உணர்ந்த இந்துமதம் தான தர்மங்களையும் ஆலய அறபணிகளையும் ஊக்குவித்ததுஅந்த தர்ம சுழற்சித்தான் பெரும் பணக்கார நாடாக எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் நாடாக இந்தியாவினை உயர்த்தியது, யாருக்கும் எந்த குறையும் இல்லை, அந்நிலையில் சமூகம் பெரு வாழ்வு வாழும்தானமும் தர்மமும் மிக்க நாட்டில் எந்த குழப்பமும் இராது,
குழப்பமில்லா நாட்டில் சுபீட்சம் பெருகும், இந்துமதம் அப்படித்தான் இந்தியாவினை பெரும் செல்வந்த நாடாக ஆக்கிவைத்திருந்ததுஅதன் வேதங்களும் தாத்பரியமும் அப்படி இந்நாட்டை உருவாக்கி வைத்தனதட்சசீலம், நளந்தா என நாட்டின் பல இடங்களில் இருந்த பல்கலைகழகங்கள் இந்து பல்கலைகழகங்களாக பெரும் அறிவு சிந்தனையினை ஏற்படுத்தின, அவை இந்துக்களின் பெரும் அறிவின் அடையாளமாய் இருந்ததுஇந்தியாவினை வென்று அதை தக்கவைக்க அதன் முதுகெலும்பான இந்துமதம் ஒழிக்கபட்டு தங்கள் மதம் நிறுவபட்டால் தவர வேறு சாத்தியமில்லை
என்பது எதிரிகளின் கனக்கு, அதில் தவறொன்றும் இருக்க முடியாது ஆட்சியின் நீதி அதுஒரு அரசன் கைபற்றும் நாட்டை தன் கலாச்சார அடிப்படைக்கு மாற்றி தன் மதம் தன் வாழ்க்கைமுறையினை திணித்தால்தான் அவன் அச்சமின்றி ஆளமுடியும்இதனால் இந்தியாவினை குறிவைத்த எதிரிக்கெல்லாம் இந்துமதம் பெரும் சவாலாக இருந்ததுஆனால் இந்துமதம் தன்னை அழிக்க வந்தவனையெல்லாம் அடித்து விரட்டி கொண்டே இருந்தது, அடித்து விரட்டமுடியா காலம் இருந்தாலும் அவன் இங்கே நிம்மதியாக வாழ அது விடாமல் தன் எதிர்ப்பினை கொடுத்து கொண்டே இருந்தது
அந்த இந்துமதம் கொடுத்த எதிர்ப்புத்தான் வரலாற்றின் முதல் சுதந்திர போர்இதை முதலில் செய்தவன் இன்றைய பஞ்சாப் பக்கம் சீலம் நதிகரையில் அன்று ஆண்ட இந்துமன்னன் போரஸ் எனும் புருஷோத்தமன்அன்று இயேசு முமகது நபி என யாரும் பிறந்திருக்கவில்லை, கிமு 300ம் ஆண்டுகள் அவைஐரோப்பாவில் ஆசியாவினை தொட்டு கொண்டிருக்கும் கிரேக்க நாட்டுக்கு அரேபியாவும் எகிப்தும் இந்தியாவும் பெரும் கனவாய் இருந்தன, எகிப்து அரேபிய தொடர்புகளால் அவர்களுக்கு சிந்தனைகள் வளர்ந்தனஅந்த சிந்தனைகள் ஒரு ஞானியினை உருவாக்கின அவன் அரிஸ்ஸ்டாட்டில், அவன் கிரேக்க நாட்டின் பெரும் ஞானியாய் இருந்தான்,
அந்த ஞானி தன் கூர்மதியால் அலெக்ஸ்டர் எனும் வீரனை உருவாக்கினான்அவனை தன் சக்திமிக்க ஆயுதமாய் மாற்றி கிரேக்க மதமும் கலாச்சாரமும் உலகெல்லாம் பரவ ஏவிவிட்டான்அவனை தொழுது கிளம்பிய அலெக்ஸ்டாண்டர் துருக்கி எகிப்து பெர்ஷியா என அன்றைய வல்லரசுகளை எல்லாம் அடிமைபடுத்தி அவர்கள் அடையாளத்தை ஒழித்துகட்டி எங்கும் கிரேக்கமயமாக்கினான்எகிப்திய மதம் பண்டைய அராபிய மதமெல்லாம் ஒழிக்கபட்டு எங்கும் கிரேக்கம்
கோலோச்சியதுகிரீஸில் இருந்து ஆப்கன் வரை பெரும் ராஜ்ஜியம் அமைத்த அவன் தன் நீண்டநாள் கனவும் இறுதி இலக்குமான இந்தியாமேல் பாய்ந்தான்அதுவரை வடக்கே இமயம் தெற்கே கடல் மேற்கே பெரும் ஆறுகள் என காவலாக இருந்த இந்தியா அவன் காலத்தில் முதல் சோதனையினை சந்தித்ததுபுராண காலம் ராமன் காலம், கன்ணன் காலம் தாண்டி பிரிஹாட்ரத வம்சம், ஹரியங்க வம்சம், சிசுநாக வம்சம், ரோர் வம்சம் என கால காலமாக இந்தியாவினை இந்து வம்சங்கள் ஆண்ட வழக்கில் அப்பொழுது நந்த வம்சம் பலமாய் இருந்ததுதெற்கே சேர சோழ பாண்டியர் எனவும் இன்னும் பல மன்னர்களும் வலுவாய் இருந்தனர்,
கடல்படை வலுவாய் இல்லாத காலத்தில் நாட்டின் ஆபத்து வடக்கேதான் இருந்தது, அலெக்ஸாண்டர் அப்படித்தான் வந்தான்இந்தியாவின் இயற்கை அரண் எப்பொழுதும் பலமானது எனினும் பெரும் கில்லாடியான அலெக்ஸாந்தர் சிந்துநதியின் பலவீனமான இடங்களை அடையாளம் கண்டு இந்தியாவுக்குள் ஊடுருவினான்அவனை எளிதாக முறியடித்தான் மாவீரன் போரஸ், அதுவரை தோல்வியே அடையாத அலெக்ஸாண்டர் முதல் தோல்வியிலே இந்தியாவின் பலம் அறிந்தான், ஒருவகை ஞான தேடல் கொண்ட அவன் இந்துமதம்பால் ஈர்க்கபட்டு தண்டமுனியின் சீடனாகி ஒரு ஞானியாக எல்லாம் வெறுத்து தன் ராஜ்ஜியத்தை தன் வீர்ர்களிடமெ கொடுத்துவிட்டு பாபிலோன் எனும் பாக்தாத்தில் மரித்தான்
அவன் புருஷோத்தமனுடன் போராடிய காலங்களில் சாணக்கியன் எனும் பெரும் இந்துஞானி சமுத்திரகுப்தன் எனும் வேட்டைகாரனை மன்னனாக உருவாக்கி பெரும் இந்து ராஜ்ஜியம் படைத்திருந்தான்அலெக்சாண்டர் இறந்தாலும் ஆப்கானில் அவன் நண்பன் செலூகஸின் ஆட்சி இருந்தது , அவனுக்கு இந்தியா குறியாய் இருந்தது, இந்தியாவில் நுழைய வாய்ப்பு பார்த்து கொண்டே இருந்தான்(பின்னாளில் கஜினி கோரி என யாரெல்லாமோ இந்தியாவில் பாயும் அந்த முயற்சியினை செலுகஸ்தான் தொடங்கி வைத்தான்)ஆனால் குப்தபடைகள் எளிதாக செலுக்கஸின் படைகளை முறியடித்தன, பின் சில சமரங்களுக்கு பின் அமைதியானான் செலூகஸ்,
அவனால் இந்தியாவினை வெற்றி கொள்ளவே முடியவில்லைஅலெக்சாண்டர் போல அவன் நண்பனும் தோற்று திரும்பினான்இந்தியா அப்படிபட்ட ஆச்சரியமான நாடு, அதன் சவால் உலகில் எந்த மூலையில் எழுந்தாலும் அதற்கு சவாலான ஒருவன் இந்தியாவில் தானாக உருவாகி வருவான், அந்நாட்டின் வரம் அதுகிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் உருவானபொழுது இந்தியாவில் சாணக்கியன் எனும் இந்துஞானி உருவானான்அலெக்ஸ்டாண்டர் எனும் கொம்பன் உருவானபொழுது இங்கே சந்திரகுப்தன் என்பவன் தானாக எழும்பினான்
இப்படிபட்ட அதிசய இந்தியா சாணக்கியன் காலத்தில் பெரும் சக்தியாய் இருந்தது, அவன் இந்துக்களின் அடையாளங்களை சின்னமாக்கி வைத்திருந்தான்அதனில் அன்றைய சக்கரவழிபாடு பிரதானமானது, இந்துக்களின் பெரும் தெய்வமான கண்ணபிரான் கையில் இருந்த சக்கரத்தை சக்தியின்வடிவாய் கொண்டு அதன் அருகே இந்திய அடையாளமான யானையினையும் குதிரைகளையும் காளைகளையும் நிறுவி ஒரு அடையாளம் கொடுத்தான்அந்த சக்தியில் இத்தேசம் சிங்கமென நான்கு பக்கமும் சீறும் என அன்றே சொல்லி சிங்கங்களையும் குறியீடாக நிறுவினான்அதுவரை ஆபத்தில்லா இந்தியாவுக்கு இனி நான்கு பக்கமும் ஆபத்துவரும் அதை சிங்கமென சீறி இந்தியா நான்கு பக்கமும் பாய்ந்து தன்னை காக்கும் என முதலில் சொன்னது சாணக்கியனும் அவன் குப்த அரசுமே(அந்த சின்னம் பின்னாளில் அசோகன் கையில் கிடைத்து அதை அவனே உருவாக்கியது போல் ஒரு மாயை பின்னளைய வரலாற்று திரிபில் நடந்தாலும் காலம் அதை பொய் என சொன்னது )அவர்கள் காலத்தில் வலுவான இந்தியா உருவானது, இனி எதிரி வெளியில் இல்லை எந்த எதிரியும் இந்தியாவினை படையெடுத்து கைபற்றமுடியாது எனும் நிலையில் ஒரு ஆபத்து உள்ளே உருவானதுஅந்த ஆபத்தின் பெயர் புத்த மதம்,
அதுதான் அதன் கொல்லாமை அஹிம்சை கொள்கைதான் தேசத்தின் போர்குணத்தை பாதித்தது, அசோகன் போன்ற மன்னர்களே யுத்தம் வேண்டாம் சேனை வேண்டாம் என முடிவெடுத்தபொழுது இந்தியாவின் பாதுகாப்பு கேள்விகுறியானதுதேசம் அடுத்த பெரு சவாலை சந்தித்தது, அலெக்சாண்டருக்கு பின் அதுதான் தேசம் கண்ட சவால்..(தொடரும்..)