இந்திய தேர்தலை மகா உன்னிப்பாக கவனிக்கும் நாடு இஸ்ரேல்

இந்திய தேர்தலை மகா உன்னிப்பாக கவனிக்கும் நாடு இஸ்ரேல்

இப்பொழுது இஸ்ரேலிலும் இந்தியாவிலும் தேர்தல் அதில் இஸ்ரேலில் நேதன்யாகு வந்தாயிற்று, இப்பொழுது இஸ்ரேலின் மிக நீண்ட நாள் பிரதமர் அவர்தான்

இப்பொழுது அவர்மேல் மக்களுக்கு என்ன சந்தோஷம் என்னவென்றால் இந்தியாவினை இஸ்ரேல் வளைத்து போட்டது

பாலஸ்தீன இந்திய உறவுக்கு ஆப்பு வைத்ததாயிற்று, இந்திய சந்தையினை வளைத்தாயிற்று, தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவினை கூட்டணிக்கு சேர்த்தாயிற்று, ரஷ்ய சாதனங்களுக்கு பதில் இஸ்ரேலிய தயாரிப்புகளை பெறுவது என ஏக காரணம்

இதனால் இந்திய உறவை வளர்த்தது நேதன்யாகுவின் செல்வாக்கினை அதிகரித்தது

இப்பொழுது காங்கிரஸ் வந்தால் இந்த அளவு உறவு வலுக்காது என அஞ்சும் இஸ்ரேல் பாஜக அரசையே விரும்புகின்றது

ஆம் 1991 வரை அதாவது ராஜிவ் காலம் வரை இந்தியா பாலஸ்தீன ஆதரவு நாடு, வாஜ்பாய் காலத்தில்தான் இந்நிலை மாறியது

பிரணாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு செல்லும் பொழுதே இந்தியாவின் முகம் மாறிவிட்டது உலகிற்கு தெரிந்தது

மோடி காலத்தில் பாலஸ்தீனத்தை இந்தியா மூட்டை கட்டியாயிற்று

காங்கிரஸின் வெளியுறவு கொள்கை அணுகுமுறை வேறுமாதிரியானது, பாஜகவின் அணுகுமுறை வேறுமாதிரியானது

பாஜகவே இஸ்ரேலிய தேர்வு என்றாலும் மாற்று அரசு வந்தாலும் இஸ்ரேல் தந்திரமாக வளைக்கும்

ஆம் நம்மைவிட இந்திய தேர்தலை அதிகம் எதிர்பார்க்கின்றார் நேதன்யாகு