இந்திய பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது
இந்திய பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டார்கள்
அமெரிக்க சீன மோதல், ஈரான் யுத்த மேகம் இன்னும் டிரம்ப் எடுக்கும் பல அழிச்சாட்டிய முடிவுகளால் உலகமே திகைத்து நிற்கின்றது
அரபுநாடுகளில் கூட கடும் வீழ்ச்சியும் நெருக்கடியும் நிலவுகின்ன்றது
ஐரோப்பிய நாடுகள் நிலையும் சொல்லிகொள்வது போல இல்லை, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து முழுக்க வெளிவர யோசிக்கின்றது
அமெரிக்கா என்பது பெரும் சக்தி படைத்த நாடு என்பது அது சில இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் பொழுது உலகம் உணரும்
1998, மற்றும் 2008களில் நடந்தது போன்ற உலகளாவிய மந்தம் இது
இதற்கு ஒரே காரணம் அமெரிக்கா என்பது மட்டும் உண்மை
ஆக உலகமே பாதிக்கபடும்பொழுது இந்தியாவும் சில நெருக்கடிகளை சந்திக்கும்
பொருளாதாரம் சரிகின்றது என ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்க அங்கு பாருங்கள்
திரையரங்கம் நிரம்பி வழிகின்றது, நகை கடை, ஜவுளி கடைகள் எல்லாம் ஹவுஸ்புல்
உணவங்களில் வரிசை நீள்கின்றது, டாஸ்மாக் கேட்கவே வேண்டாம்
அவனவன் போக்கில் அவனவன் ஜாலியாக செலவழித்து கொண்டுதான் இருக்கின்றான்
அவனவன் வியாபாரம் கொழிக்கத்தான் செய்கின்றது
புதுபுது படங்கள் தயாரிக்கபடுகின்றன, துறைமுக ஏற்றுமதி இறக்குமதி அதன் போக்கில் நடக்கின்றது
சரவணா ஸ்டோர் முதலாளி அவர் போக்கில் ஆடத்தான் செய்கின்றார்