இந்திய ராணுவம் கடந்த 5 ஆண்டுகளில் மகா பலம் பொருந்தியதாக மாறி இருக்கின்றது

இந்திய ராணுவம் கடந்த 5 ஆண்டுகளில் மகா பலம் பொருந்தியதாக மாறி இருக்கின்றது, குறிப்பாக இரு வகை ஏவுகனை சோதனைகளை உலகம் மிக உன்னிப்பாக கவனிக்கின்றது

முதலாவது நாக் ரக ஏவுகனைகள், இது டாங்கி எதிர்ப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கபட்டது, நாகம் என்ற சொல்லின் சுருக்கமே நாக்

பொதுவாக ஏவுனைகள் என்பது இலக்கினை நேரே சென்று தாக்கும் வகையில் இருக்கும் தானாக எதுவும் திரும்பாது, முக ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து படிப்பது போல தட்டிய திசைக்கு செல்லும்

ஆனால் நாக் ஏவுகனைகள் இஸ்ரேலிய அயண் டோம் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்பைக் மற்றும் அமெரிக்க ஜாவலின் ஏவுகனை ரகம்

அதாவது இலக்கின் படத்தை கொடுத்துவிட்டால் அதுவாக தேடி சென்று அடித்து ஒழிக்கும், இலக்கு , நகரும் இலக்கு என்றாலும் சிக்கல் இல்லை

இந்த கலைஞர் கருணாநிதி போல் சுற்றி சுற்றி மாய்மாலம் செய்து இலக்கை அடிக்கும்

இன்னும் ஆழமாக சொன்னால் எதிரி டாங்கிபடை எதிர்த்து வரும்பொழுது இந்த ஏவுகனைகளை அந்த டாங்கி நோக்கி லாக் செய்துவிட்டு அதாவது இலக்கு இது என படமாக லாக் செய்துவிட்டால் போதும், எதிரி டாங்க் எப்பக்கம் திரும்பினாலும் நாகபாம்பு சுற்றிவந்து விடாமல் அடிப்பது போல அடிக்கும்

நாகம் என்பதற்கு மிக சரியான ஏவுகனை இது

இம்மாதிரி ஏவுகனை அமெரிக்கா, இஸ்ரேல் தவிர இனி இந்தியாவிடம் மட்டும் உண்டு, இந்த நுட்பத்தை இனி விமான எதிர்ப்பு ஏவுகனை ரகங்களுக்கும் இதர வகைக்கும் மாற்றினால் அது மாபெரும் பலம்

அடுத்த அட்டகாச தயாரிப்பு K – 4 ரக நீர்மூழ்கி ஏவுகனை, இது நாசகாரி ரகம், ஆம் அணுகுண்டை சுமந்து 3000 கிமீட்டர் வரை அசால்ட்டாக தாக்கும்

யுத்தம் என வந்தால் அந்தமானில் இருந்து சீனாவின் ஷாங்காயினை அட்டகாசமாக நொறுக்கலாம், மிக பெரும் பலம் வாய்ந்த விஷயம் இது

ஏவுகனைகள் தரையிலும் விமானத்தில் இருந்தும் ஏவபடுவது போல நீர்மூழ்கியில் இருந்தும் ஏவபடுவது பலம், சொல்ல போனால் மகா ரகசியமானது., மற்ற இரு வழிகளை விட பாதுகாப்பானது

இந்த K-4 ஏவுகனை சோதித்து முடிக்கபட்டபின் இந்திய தயாரிப்பான ஹரிகந்த் நீர்மூழ்கியில் சேர்க்கபடும்

இதனால் உலகின் மிக பெரும் ராணுவ பலம் பெற்ற நாடாக இந்தியா கவனிக்கபடுகின்றது, இந்தியாவின் பலம் உலகை அதிர வைக்கின்றது

இந்த 5 ஆண்டில் மட்டும் 45 ஆயிரம் கோடிக்கு நவீன ராணுவ கருவிகள் வாங்க பட்டிருக்கின்றன,

நவீன ஏவுகனைகளும் இன்னும் பலவும் உருவாகியிருகின்றன, செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனைவரை நம்மால் உருவாக்க முடிகின்றது

இதெல்லாம் இந்த நாடு எப்பொழுதும் எந்ந்த யுத்தத்துக்கும் தயாராக இருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றது. ராணுவம் மகா விழிப்பான நிலையில் வைக்கபட்டிருக்கின்றது

இந்த நாக் ஏவுகனைக்கு நாகம் என பெயர் சொன்னோம், K 4 ல் வரும் K என்பது யாரை குறிக்கும் தெரியுமா?

நம் கலாம், இந்தியாவின் பிதாமகன் கலாமின் பெயர்

திமுகவும் காங்கிரசும் இரண்டாம் முறை குடியரசுதலைவர் ஆக்காமல் அவமானபடுத்திய, 5ம் வகுப்பை தாண்டா கருணாநிதி கலாம் என்றால் கலகம் என எள்ளி நகையாடிய அந்த கலாமின் பெயர்

தேசபற்றுமிக்க தமிழர் கலாமை திராவிட கட்சியும் காங்கிரசும் சிறுமைபடுத்த அவர் வாழும் காலத்திலும் அவர் இல்லா நிலையிலும் அவர் நினைவினை போற்றுவது பாஜக மட்டுமே

இம்மாதிரி விஷயத்தில்தான் நாம் பல இடங்களில் பாஜகவினை பாராட்டுகின்றோம்