இந்திய விடுதலையின் சின்னம்
தாஜ்மஹால் சம்பந்தமாக பிரக்யாராஜ் (அலகாபாத்) உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
அந்த தாஜ்மகால் உண்மையில் சிவாலயம் என்றும் தேஜா மஹலாயா எனும் பெயரில் இந்து ஆலயமாக இருந்ததாகவும் பின் ஷாஜகான் அதை அன்மித்த பகுதியில் சமாதி அமைத்து அக்கோவில் உள்பட சமாதியினை விஸ்தரித்ததாகவும் சர்ச்சை உண்டு
ஷாஹஜான் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் தவிர்க்கபடமுடியாதவள் அர்ஜுமென்ட் பானு பேகம் எனும் மும்தாஜ், அந்த பாரசீக குடும்பத்துக்கும் மொகலாய குடும்பத்துக்குமான தொடர்பு ஜஹாங்கீர் காலத்தில் ஆரம்பிக்கின்றது
மொகலாய மரபில் முதல் வாரிசுக்கு அரசபதவி அல்ல யார் சிறந்தவனோ யார் வலிமையானவனோ அவர்களுக்கே அரசபதவி
அவ்வகையில் குர்ரம் எனும் ஷாஜகான் பெரும் போராட்டம் நடத்தித்தான் , தன் சகோதரன் குர்ஷூ என்பவனுக்கு அவன் செய்த கொடுமை எல்லாம் அவுரங்கசீப் தன் உடன்பிறப்புக்களுக்கு செய்த கொடுமைக்கு கொஞ்சமும் குறைவானது அல்ல
ஷாஜகான் அவுரங்க்சீப்பால் சிறைபட்டு செத்த காலஙகளில் தன் கடந்த கால கொடுமைகள் குறித்து வருந்தியிருக்கலாம்
அந்த ஷாஜகானுக்கு மும்தாஜ் மேல் தீரா காதல் வந்தது, அவள் 37 வயது வாழ்வில் 14 குழந்தைகளை பெற்றாள், சில கலைந்து போனவைகளும் உண்டு, அப்படி என்றால் ஷாஜகானை சந்தித்த பின் காலமெல்லாம் கர்பமாகவே இருந்திருக்கின்றாள் என பொருள்
அவள் மேல் ஷாஜகான் கொண்ட மயக்கம் அப்படியானது
1631ம் ஆண்டுகளில் ஷாஜகான் அரசனாகி தக்காணத்துக்கு சண்டையிட வந்தான், அதே தக்காணத்தில்தான் அதாவது அஹமதுநகர் சுல்தானியத்தில்தான் முன்பு அண்ணனுடன் சண்டையிடும் பொழுது அவன் அடைக்கலம் தேடி வந்திருந்தான்
அகமதுநகர் திவான் ஆப்ரிக்க கறுப்பன் மாலிக் ஆம்பரும், மராட்டிய மாவீரன் ஷாஹாஜியும் அவனுக்கு அடைக்கலம் வழங்கினார்கள், அந்த ஷாஹாஜிதான் சத்ரபதி சிவாஜியின் தந்தை
இப்பொழுது அவர்களை எதிர்த்து அடிபணிய வைக்க ஷாஜகானே வந்தான்
ஷாஜாஜியும் ஷாஜகானும் தீராபோர் நடத்திய 1630களில்தான் வீரசிவாஜி பிறந்தான், அதன் மறுவருடம் 1631ல் மும்தாஜ் மறைந்தாள், அதுவும் கடைசி மகளை பெற்றெடுக்கும் வேளை மறைந்தாள்
அவளின் மறைவுதான் அந்த போரை தற்காலிகமாக நிறுத்தியது, அப்போதைக்கு அவள் உடல் மராட்டிய பர்ஹான்பூர் பக்கம் புதைக்கபட்டது
மிகுந்த சோகத்துடன் ஆக்ரா திரும்பிய ஷாஜகான் (அவர்கள் தலைநகர் அப்பொழுது ஆக்ராதான்) அவள் சமாதி தன் அருகே இருக்க வேண்டும் என்று அவள் உடலை 1 வருடத்தில் ஆக்ராவுக்கு மாற்றினான்
அதன் பின்புதான் பெரும் மண்டபம் கட்டும் ஆசை அவனுக்கு வந்தது
இங்குதான் சிக்கல் எழுகின்றது, வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது இதைத்தான்
மொகலாய அக்பர் ராஜபுத்ர இளவரசி ஜோத்பாய் எனும் இந்துபெண்ணை திருமணம் செய்ததில் இருந்து அந்த மிர்சா ராஜா சிங் குடும்பத்துக்கும் மொகலாயருக்குமான உறவு தொடங்கிற்று
மும்தாஜூக்கு மிக பிரமாண்ட காதல் மாளிகை எழுப்ப ஷாஜகானுக்கு ஈரான் எனும் பெர்ஷியாவின் அழிந்து போன மசோலியம் நினைவுக்கு வந்தது
உலகின் முதல் அழகான காதல் மாளிகை மசோலியமே, 16ம் நூற்றாண்டுவரை காதலுக்கு ஒரு அழகான காணிக்கையாக அதுதான் சொல்லபட்டது
அதனை கட்டியவள் ஒரு பெண்
ஆம் பெண்கள் காதல் மாளிகை கட்டவில்லை, செங்கல் நட்டுவைக்கவில்லை என்பதெல்லாம் சரியல்ல, வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு பெண்ணும் தன் காதலை எப்படி கொண்டாடுவாள் என்பதற்கு அந்த பாரசீக இளவரசியே சாட்சி
ஆம், பாரசீக பேரரசின் ஒரு பகுதி தான், காரியா நாடு. அதை ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான். அவன் பெயர் மாசோலஸ், நல்ல அழகனும் அறிவாளியுமாக இருந்தான், அவனை காதலித்து திருமணம் செய்தாள் ஆர்ட்டி மிர்சியா
ஆனால் கணவன் நோயில் மார்சலஸ் இறந்துபோக அவள் மனமுடைந்தாள்
காதலன் இறந்தான் ஆனால் என் காதல் இறக்கவில்லை என உலகுக்கு காட்ட விளைந்தாள் அந்த மிர்சியா, உலகின் அதி உன்னத கட்டடம் ஒன்றை அவனுக்கு எழுப்ப துணிந்தாள்
ஆம், ஒருவன் நினைவு நிலைக்க இலக்கியம் அல்லது கட்டடம் என ஒன்று வேண்டும் அது அல்லாது நினைவுகள் நிலைக்காது, தன் காலதை அழகிய மண்டபமாக நிறுத்த முனைந்தாள் மிர்சியா
தன் காதலின் பிரமாண்டத்தையும் அந்த ஆழத்தின் வடிவத்தையும் கட்டட வடிவில் காண நினைத்தாள்
உலகத்தின் புகழ்பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். பிரமாண்டமான 36 துாண்கள் அமைக்கப்பட்டன. அதற்கு மேலே விண்ணை முட்டும் அளவில், 24 அடுக்குகள் கொண்ட விதானம் அமைக்கப்பட்டது.
நடுவில் கல்லறை, அதற்கு மேல் மாசோலஸ் மன்னருடைய பிரம்மாண்ட சிலை. கல்லறைக்கு செல்ல, 200 படிகள். ஒவ்வொரு படியிலும், கண்ணைக் கவரும் ஓவியங்கள் வைக்கபட்டன
உலகில் காதலுக்காக எழுந்த பிரமாண்ட கட்டடம் அதுதான், அதை எழுப்பியவள் மிர்சியா, அதற்கு கணவன் நினைவாக மசோலியம் என பெயரிட்டாள்
(இன்று லெனின் , மாவோ, கிம் சமாதியெல்லாம் மசோலியம் என அழைக்கபடும் பெயரின் மூலம் இங்கிருந்துதான் வந்தது)
அப்போது, உலக அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.
பாரசீகருக்கும் ஆப்கானியருக்குமான போரில் ஆப்கானியர் அந்த நாட்டை கைபற்றி மசோலியத்தினை கொள்ளையிட்டனர்
மசோலிய கதவுகளில் மாணிக்கமும் கற்களும் இருந்தது, கட்டமெங்கும் தங்கமும் வைரமும் ஜொலித்தது இன்னும் மார்சலோஸ் கல்லறைக்குள் நவமணி இடபட்டிருக்கலாம் என எண்ணிய கொள்ளை கூட்டம் அந்த அழகிய மண்டபத்டையே இடித்தது
பாரசீக மக்கள் “இது காதல் அடையாளம் விட்டுவிடுங்கள்” என கெஞ்சியபொழுதும் அக்கொள்ளை கூட்டம் விடவில்லை, அழித்து ஒழித்தது
அந்த காதல் காவியத்தை இடித்த ஆப்கன் மரபில் வந்த ஷாஜகான் அப்படி ஒரு கட்டடத்தை மீள எழுப்பி மும்தாஜுக்கு கொடுக்க விரும்பினான்
அவனுக்கு யமுனை ஆற்றின் ஒரு பக்கம் மும்தாஜுக்கு வெள்ளை சலவை கல் மஹாலும் எதிர்பக்கம் தனக்கு கருப்புகல் மகாலும் கட்டும் திட்டம் இருந்தது
அதற்கு தோதான இடம் மிர்சா ராஜா ஜெய்சிங்கிடம் இருந்தது
(இந்த மிர்சா ராஜாதான் வீரசிவாஜியினை பிடிக்க வந்து அவுரங்க்சீப்பிடம் அனுப்பியவன், அப்பொழுதுதான் சிவாஜி ஆக்ராவில் சிறைவைக்கபட்டான்)
அந்த ஜெய்சிங் குடும்பத்தின் சிவாலயம் அருகே கொடுக்கட்ட நிலத்தை விஸ்தாரணம் செய்து தாஜ்மகாலை ஹாஜகான் கட்டினான் என்பது அக்காலத்தில் இருந்தே வரும் சர்ச்சை
ஷாஜகான் பெர்ஷிய மசோலியத்தைவிட அதை பெரிதாக அழகாக கட்டும் பொழுதுதான் அவனுக்கும் அவன் மகன் அவுரங்கசீப்புக்கும் முட்டி கொண்டது, காதலித்து விழுந்ததே தவறு இதில் காதலி தன் அன்னையாக இருந்தாலும் கோடிகணக்கான பணத்தை இப்படி கொட்டுவது தவறு என வாதிட்டான் ஒளரங்கசீப்
அந்த சண்டைதான் பெரிதாகி ஷாஜகானை சிறையில் தள்ளி உடன்பிறந்தோரை கொன்று அவுரங்கசீப் ஆட்சி அமைக்க காரணமாயிற்று
ஷாஜகான் போல் அல்லாமல் இந்தியா முழுக்க இஸ்லாமயமாக்குவேன் என அவுரங்க்சீப் எழும்பியபொழூதுதான் வீரசிவாஜி எழுந்து பெரும் அடிகொடுத்தான், அவனுக்கு பின் அவன் அரசு மொகலாயரை ஆட்டிவைத்தது
பின் வெள்ளையன் வந்து இந்துக்கள் துணையோடு மொகலாயருக்கு முடிவுரை எழுதினான்
ஆக மொகலாயரின் சரிவை இந்துஸ்தான விடுதலையினை அந்த தாஜ்மகால்தான் தொடங்கி வைத்தது, அந்த மண்டபம் எழாமல் அவுரங்கசீப்பும் வராமல் போயிருந்தால் இந்திய தலைவிதி மாறியிருக்கும்
அப்படிபட்ட இந்துஸ்தான விடுதலை சின்னத்தின் உள்ளே சுமார் 22 அறைகள் திறக்கபடாமல் இருப்பதாகவும் அங்கு இந்து சிலைகள் இருக்கலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது
உண்மையில் தாஜ்மகாலில் பல அறைகள் திற்க்கபடாமல் இருப்பது நிஜம்
இப்பொழுது அதை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கின்றது, இனி என்னென்ன நடக்கும் என்பதை காலமே காட்டும்
இந்த விஷயத்தில் மதவாதம் , மோடி பாசிசம், சங்கித்தனமெல்லாம் விஷயம் அல்ல, அங்கு 22 அறைகள் பூட்டியிருக்கின்றன அதனை திறக்க நீதிமன்றம் அனுமதித்தால் திறக்கலாம், உள்ளே என்ன இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம் அவ்வளவுதான் விஷயம்
அது காதல் சின்னம் என சொல்பவர்கள் சொல்லட்டும் , ஆனால் அது எழுந்தபின்புதான் இந்திய விடுதலை சாத்தியமாயிற்று, மொகலாயத்தின் சரிவு அங்கிருந்துதான் தொடங்கிற்று அவ்வகையில் அது இந்திய விடுதலையின் சின்னம்