இன்று இந்திய விமான படையின் 86ம் ஆண்டு விழா
வெள்ளையன் காலத்திலே 85 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்டது நம் விமானபடை. அன்று இரண்டாம் உலகபோருக்காக வெள்ளையன் தொடங்கினான்
சுதந்திர இந்தியாவில் அதுவும் சீன போருக்கு பின் நம் விமானபடை வலுபடுத்தபட்டது.
இன்று மிக சிறந்த விமானபடை வரிசையில் இந்தியாவிற்கும் இடமுண்டு. கார்கில் போரில் இந்திய விமானபடையின் அபார நடவடிக்கையாலே வெற்றி கிட்டியது.
அதற்கு முந்தைய காலகட்டங்களின் பல போர்களில் இந்திய விமானபடையின் பங்களிப்பு பெரிது, பாகிஸ்தானுடனான எத்தனையோ போர்களில் அது சாதித்தது
இலங்கைக்கு அமைதி நடவடிக்கையாக உதவி பொருட்களுடன் பறந்து இலங்கையினை மிரட்டிய அந்த விமானபடை சாகசங்களை எல்லாம் மறக்க முடியாது
இந்திய விமானபடை இன்று வலுவானதாயினும் அது கடந்துவந்த பாதை சிக்கல் நிறைந்தது. ரஷ்ய உதவியுடன் பலபடுத்தபட்ட நம் விமானபடை பின் இன்று உலகின் மிக சிறந்த விமானங்களுடன் முதல் வரிசையில் இருக்கின்றது
இந்திய தயாரிப்பான ஆளில்லா தேஜஸ் ரக விமானங்களும் அதற்கு வலுசேர்க்கின்றன
மிக், ஜாகுவர், மிராஜ், சுகோய் என மிக நவீன ரக விமானத்துடன் , எம்7 ரக ஹெலிகாப்டர்களுடனும் ஆசியாவின் மிக கம்பீரமான விமான படையாக திகழ்கின்றது
அமெரிக்காவும் தன் எப் ரக விமானங்களை கொடுத்து வலுபடுத்தும் என சொல்கின்றார் டிரம்ப், வம்புக்கு போகாத ஆனால் வந்த சண்டையினை விடாத இந்திய விமானபடை மேல் அவருக்கும் அபிமானம் அதிகம்
உலகின் மிக சிறந்த விமானபடையினை வைத்திருக்கும் நாடு என்பதில் பெருமை கொள்வோம்
யுத்தகாலங்களில் இந்திய விமானிகள் செய்திருக்கும் தியாகமும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல
பிதாமகன் அர்ஜன் சிங்கிலிருந்து, பிடிபட்டு பாகிஸ்தான் ராவல்பிண்டி ஜெயிலில் சித்திரவதை அனுபவித்தது வரை வீரர்களின் தியாகம் பெரிது
அந்த தியாக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மிக கம்பீரமாக நமது விமானப்டை தன் தினத்தை கொண்டாடுகின்றது [ October 8, 2018 ]
அதற்கு வீரமிகுந்த வாழ்த்துக்கள், எந்த சூழலிலும் இந்நாட்டின் பாதுகாப்பிற்கு எப்பொழுதும் தயார் என மிக விழிப்பாக காவல்காக்கும் விமான படைக்கு ராயல் சல்யூட்
வந்தே மாதரம்