இந்திராவின் இந்தியா : 01
இந்திராவின் இந்தியா : 01இன்று அன்னை இந்திராவின் நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம்அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம்உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி.இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான்.மோதிலால்,ஜவஹர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, சுற்றி பெரும் அரசியல் ஜாம்பபான்களுடன் வளர்ந்தவர். அரசியல் காற்றைத்தான் அவர் சுவாசித்தார், அரசியலை பார்த்தபடியேதான் வளர்ந்தார்.சீனாவின் துரோகம் நேருவிற்கு தாங்கமுடியாத வலி, அந்த சோகத்திலே இறந்தும்போனார். அதன் பின் வந்த இந்திரா பக்கத்துநாடுகளின் விஷயங்களை எல்லாம் அதிரடியாக கையாண்டதற்கு முதல்காரணம் துரோகி மாவோவும், அவரிடம் ஏமாந்த நேருவும்.இந்திரா இந்தியாவை ஆட்சிசெய்தவிதம் அனைவரும் அறிந்தது, அதனை மறுபடி விளக்கி சொன்னால், இதோ பாய்விரித்து படுத்துவிட்ட காங்கிரசை எழுப்பிவிட ஒருவன் வந்துவிட்டான் என அரசியலாக்குவார்கள், நமக்கு அவரின் அரசியல் வேண்டாம்.அவரின் காலத்தில் விண்வெளி துறை முழு பாய்ச்சல் காட்டியதையும் அந்த அனுபவத்தில் ஏவுகனை மற்றும் செயற்கைகோள் நுட்பத்தில் இன்று இந்தியா பெரும் ஆதிக்கம் செலுத்துவதும் எல்லோரும் அறிந்ததுஆரியபட்டா முதல் இன்றை எம்சாட் வரை அவரின் உழைப்பு இருக்கின்றது. அக்னி ஏவுகனை முதல் இந்நாளைய செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனை வரை அவரின் அஸ்திவாரம் உண்டுஇந்திராவின் பெரும் சாதனையான இந்திய உளவுதுறை வெற்றிகளை பார்ப்போம்.இந்திய உளவுதுறை “ரா” அவர் காலத்தில்தான் தொடங்கபட்டது, அதுவரை இந்திய உளவு அமைப்பு இந்தியாவிற்குள் மட்டும் உளவுபார்க்கும் (தமிழக உளவுதுறை போல 🙂 ) , இந்திரா காலத்தில்தான் வெளிநாட்டு உளவு பார்க்கும் அமைப்பு கே.என்.காவ் தலமையில் தொடங்கப்ட்டது, அதன் பிராதான பாத்திரம் பி.ராமன்(இந்த தமிழர்தான் இந்திய உளவுதுறையின் பிராதான மூளை).சில உணர்வாளர்கள் உண்டு, ஒரு நாள் நரசிம்ம”ராவ்” படத்தினை கடுமையாக திட்டிகொண்டிருந்தார்கள், விசாரித்ததில் ஈழகுழப்பத்திற்கு “ராவ்”வின் நடவடிக்கை காரணம் என எங்கோ படித்தார்களாம், அவர்கள் கண்ட “ரா” அப்படி.சீனா இந்திராவின் முதல் எதிரி , காலம் மாறியது சோவியத் மாவோ தகறாறில் மாவோ தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையும் மறந்து அமெரிக்க பக்கம் சாய, இந்திரா ரஷ்ய பக்கம் சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தார்.இந்திராவும் அமெரிக்க அதிபர் நிக்சனும் நடத்திய பனிப்போர் பிரமாதமானது, இனி ஒரு இந்தியபிரதமர் அப்படி சவால்விடமுடியுமா என்றால் அது சந்தேகம். நிக்சனே வாய்விட்டு சொன்னார், “இந்திரா ஒரு அரசியல் சூனியக்காரி”இந்திய உளவுதுறையின் பெரும் சாதனைகளில் ஒன்று வங்கப்போர், ஒரு பாகிஸ்தான் எல்லையே எந்நாளும் தொல்லை, இதில் கிழக்கில் ஒரு பாகிஸ்தான் என்றால் தாங்குமா? அவர்களுக்குள் பிணக்கு எழுந்தநேரம் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவின் செல்லபிள்ளையானார், குழப்பம் தலைதூக்க வைத்து இந்தியா ராணுவ நடவடிக்கை வரை வந்து, என்றும் பாகிஸ்தான் மறக்காதவாறு மரண அடிகொடுத்தது, பிண்ணனியில் இருந்தது ரா,ராவின் அறிக்கைபெறும் தலைவர் பிரதமர் இந்திராகாந்திஇந்திராவின் திறமையான ரா, மற்றும் அதிரடி ராணுவம் கொடுத்த அடியில்தான், பாகிஸ்தானுக்கும் அந்த வெட்டு தழும்பு, தினம் கண்ணாடி பார்த்து தடவி தடவி அழுகிறது அது.அதோடு விட்டாரா பூட்டோவை கிட்டதட்ட மனோகரா சிவாஜி போல இழுத்து வந்து சிம்லா உடன்படிக்கை எனும் பாகிஸ்தான் தோல்வி பத்திரத்தில் கையெழுத்துவாங்கிய பெருமை அவருக்கே சேரும்.பின்னர் எல்லையில் போக்கு காட்டிய சிக்கிம் மன்னரை மிரட்டி இந்தியாவோடு சிக்கிமை இணைத்ததில் ராவும் இந்திராவும் மகத்தான வெற்றி பெற்றார்கள்.உச்சகட்டமாக நிக்சனின் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவில் “புத்தர் சிரித்தார்”, அந்த அணுகுண்டு சோதனைக்கு ஏன் அந்தபெயர்?, திபெத்தில் புத்தரை அழவைத்தார்கள் அல்லவா? சப்பைமூக்கர்கள், அந்த புத்தர் இந்தியாவின் அணுவலிமை கண்டு சிரித்தார்.(காரணம் இல்லாமல் இந்தியா எந்தபெயரும் வைக்காது)பின்னர் இந்திராவின் வரிசையில் பர்மா,மாலத்தீவு நாடுகளும் சேர்ந்தன, அல்லது நாங்கள் சமத்துபிள்ளை என ஓடிவந்து காலில் விழுந்தன. கிட்டதட்ட இந்திய துணைகண்டம் அதிகார உச்சம் பெற்றது.இந்திய வலிமைய தாங்கமுடியாத நிக்சன் அரசாங்கம், பொருளாதார தடை எனும் இன்றைய அநியாயத்தை அன்று ரூபாய் மதிப்பு இறக்கம் என மறைமுகமாக பழிவாங்கிற்று, அதில் விழ ஆரம்பித்ததுதான் ரூபாயின் மாகாசரிவு.அதனையும் சமாளித்தார் இந்திரா, தெற்கில் பெரும் ராஜதந்திரியான ஜெயவர்த்தனே. பாகிஸ்தான் வாழ்க,அமெரிக்க நிலைக்க என கோஷம்போட்டபொழுது ஈழபிரச்சினையில் தலையிட்டு அவரை கதறவைத்த வரலாறுகளும் உண்டு.ஈழ தலைவர் அமிதலிங்கத்தை அழைத்து ஒரு குடியரசு விழாவில் தனதருகே அமரவைத்த அந்த ராஜதந்திரம் ஒன்று போதும், எழுந்து நின்று கைதட்டலாம்.இந்திய உளவுதுறைக்கு இரு பெரும் அவமானங்கள் உண்டு ஒன்று கனிஷ்கா விமானவெடிப்பை தடுக்கமுடியாமல் போனது இன்னொன்று ஈழபிரச்சினைய குழப்போ குழப்பு என குழப்பி தள்ளியது, இரண்டும் இந்திரா காலத்திற்கு பிந்தியவை.இந்திராவின் காலத்தில்தான் “ரா” பெரும் நடவடிக்கைகளில் வெற்றிமேல் வெற்றிபெற்றது, அங்குதான் இந்திராவின் வலிமையும், அவரின் ஆளுமையும் தெரிகிறது.இவ்வாறாக சர்வதேசத்தில் உயரபறந்த இந்திரா உள்நாட்டு மக்களால் கொல்லபடும் நிலைக்கு எப்படி தள்ளப்ட்டார் என்பதுதான் சோகமான வரலாறு அதனை ஒரு இந்தியராக எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டியது.
(வருவார்..)