இந்துகளுக்கு கட்சி
இந்த நாட்டில் திராவிட இனம் காக்க கட்சி இருக்கலாம், இஸ்லாமிய நலன் காக்க இஸ்லாமிய கட்சி இருக்கலாம்
கிறிஸ்தவ நலன் காக்க கட்சிகள் இருக்கலாம்
சாதி நலன் காக்க பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என்றெல்லாம் இருக்கலாம்
வடக்கே கன்ஷிராம், மாயாவதி எல்லாம் , முலாயம் சிங் எல்லாம் சாதிக்காக கட்சி நடத்தலாம்
இதெல்லாம் போராளித்தனம், சிறுபான்மை நலன் , சமூகநீதி இன்னபிற வரிசையில் வருமாம்
ஆனால் இந்துக்களுக்காக ஒரு கட்சி இருந்தால் அதன் பெயர் மதவாதமாம், அதனை விரட்ட வேண்டுமாம்
நாட்டை மறந்து, மக்களை மறந்து இனம், சாதி, மொழி எல்லாம் காக்க கட்சியாம் அவர்களுக்குள் கூட்டணி வேறாம்
ஆனால் இந்துக்களுக்கு கட்சி இருந்தால் , இந்து மதத்தை காக்க ஒரு கட்சி இருந்தால் அது காவியாம், மதவெறியாம், பயங்கரவாதமாம், அதை இந்தியாவிலிருந்தே விரட்டுவதாக பொங்குவார்களாம்
இனம், மொழி , சாதி, சிறுபான்மை மதம் எல்லாம் காக்க கட்சி நடத்தினால் அது சமூக நீதியாம், ஆனால் இந்து மதத்திற்காக கட்சி நடத்தினால் கூடவே கூடாதாம்
ஏன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டுமாம், இந்துகளுக்கு கட்சி கூடவே கூடாதாம்
அவனவன் தன் சொந்த திராவிட, தமிழ், தலித், வன்னிய, தேவர், நாடார் என பல அடையாளங்களில் எது பொருந்துமோ அதில் கட்சி நடத்தலமாம் ,ஏன் என்றால் அதை காப்பாற்ற வேண்டுமாம்
ஆனால் இந்து எனும் அடையாளத்தில் மட்டும் கட்சி இருக்கவே கூடாதாம், ஏன் என்றால் இந்துமதம் காப்பாற்றபடவே கூடாதாம்
இது எல்லாம் என்னவகை சமூக நீதியோ தெரியவில்லை
இதை சொன்னால் நாம் ஆரிய அடிவருடி, சங்கி