இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக – கடம்பூர் ராஜூ

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக – கடம்பூர் ராஜூ

காஞ்சிமட சங்கராச்சாரியாரை ஓடவிட்டு அடித்த கட்சி எது? அதென்ன இந்துக்களுக்கு ஆதரவான கட்சியா?

கபாலீஸ்வரர் குளம் தூர்வாரியது முதல் திருவாருர் தேரினை ஓடவைத்தது வரை திமுகவின் இந்து ஆலய பணி பெரிது.

திருவண்ணாமலை ஆசிரமத்தை நெருக்கும் விதமாக ஜெயா எழுப்பிய அரசு கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த ஆசிரமத்தை காப்பாற்றியவர் கலைஞர், மறுக்க முடியுமா?

அவ்வளவு ஏன்? அண்ணா ஆட்சியிலே கும்பகோண மகாமக குளத்தினை சீர் செய்யும் பணி கலைஞரிடம்தான் ஒப்படைக்கபட்டது, மிக செம்மையாக செய்தவர் அவர்

பணி செய்தாரே தவிர, அங்கு நான் குளிப்பேன் அந்த நெருக்கடியில் 100 பேர் சாகட்டும், அவர்களை ஏறேடுத்தும் பார்க்கமாட்டேன் என்றேல்லாம் கலைஞர் செய்யவில்லை

இந்துமதத்தின் சில மூட நம்பிக்கைகளை திமுக எதிர்க்குமே அன்றி , ஒரு நாளும் இந்துக்களுக்கு எதிரான கட்சியாக அது விளங்கியதில்லை.

திருச்செந்தூர் வேலுக்காக பொங்கியதும் திமுகவே, தமிழகம் முழுக்க எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் நடத்த உறுதுணையாக இருந்ததும் திமுகவே

அந்த ஆட்சியில் எந்த ஆலயத்தில் அது தலையிட்டு நீங்கள் பார்த்தீர்கள்?.

கலைஞரே முன்பொரு அறிக்கையில் விவேகானந்தர் தொடர்ந்த இந்துவழியினை திமுக ஆதரிக்கின்றது. அவ்வழியில் இந்துக்கள் செயல்பட்டால் எங்களுக்கு என்ன வேலை? என எழுதியதெல்லாம் வரலாறாக இருக்கின்றது

கடம்பூர் ராஜூ என்பவர் ஜெயலலிதா முன் குனிந்தே நின்றவர், இப்பொழுது நிமிர்ந்து பார்த்திருக்கின்றார் அதனால் முட்டையில் இருந்து வந்த கோழிகுஞ்சு போல ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றார்

வளர்மதிக்கு பெரியார் விருது கொடுத்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், ஆச்சரியமில்லை

வரலாறுகள் அவருக்கு தெரியாவிட்டால் சொல்லிகொடுக்க நாம் தயார்