இந்துமதத்தின் மூல பாஷை எல்லாம் படித்தால் உங்களுக்கு உண்மை தெரியும்

நேற்று நாம் ஓளவையார் பற்றி எழுதும் பொழுது ஒரு திராவிட பதர் தன் வழக்கமான பைத்தியகார புத்தியுடன் பிரம்மா தன் மகள் சரஸ்வதியினையே மணந்தானே அவள் ஏன் தப்பவில்லை என எகத்தாளம் பேசிற்று

அந்த வம்பன் இங்குதான் பேச முடியும் எங்கே பைபிளை புரட்டட்டும் பார்க்கலாம், லோத் என்பவன் தன் மகள்களை கூடிய கதை அல்ல, ஆதிஆகமமே தொடக்கமே பிரம்மன் கதைதான்

ஆம் ஆதாம் என்பவன் எலும்பில் இருந்து கடவுள் ஏவாளை படைத்தார், ஆதாமின் உடலில் இருந்து உருவான ஏவாள் அவனுக்கு மகள் அல்லாமல் யார்?

ஆக மகளையே மணந்தான் ஆதாம் என ஒரு பயல் கேட்பானா? கேட்கவே மாட்டான். பகுத்தறிவு எல்லாம் இங்கேதான் பொங்கும்

எனினும் பிரம்மன் கதைக்கு நாம் விளக்கம் சொல்வோம், இதெல்லாம் மூல பாஷையில் இருந்து தமிழுக்கு வரும்பொழுது நடந்த குழப்பம், அதாவது அண்ணா கம்பனை படித்து வீம்புக்கு கம்பரசம் எழுதியது போல சமஸ்கிருதத்தை அறைகுறையாக கற்று திராவிட சிகாமணிகள் வீம்புக்கு சொன்ன தத்துவம்

உண்மை அது அல்ல‌

பிரம்மனின் படைப்புகளுள் ஒருத்தி சதரூபா, 100 வகை முகங்களை காட்டும் பெண் , அந்த சதரூபாவினை பிரம்மன் கூடி உலகை படைத்தான் என்கின்றது புராணம். ஆம் பைபிளின் ஆதாம் கதை இதுவேதான்

சரஸ்வதி என்பவள் கலைகளுக்கும் அறிவுக்கும் அதிபதி, உலகை படைத்த பிரம்மன் ஏதோ ஒன்று குறைவது புரிந்து கவலையில் இருக்கும் பொழுது அவன் கமண்டல நீரில் இருந்து சரஸ்வதி உருவானாள் அவளை தன் அருகே அமர்த்திகொண்டான் பிரம்மன்

இதை இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் உலகை இயக்கும் மாபெரும் சக்தியினை தன்னோடு வைத்துகொண்டார்

சதரூபா வேறு சரஸ்வதி வேறு..

இதுதான் இந்துமதம் சொல்லவருவது மாறாக தன் மகளை ஓட ஓட கற்பழித்தார் என்பதெல்லாம் இந்துமதத்தினை ஒழிக்கவேண்டும் என்ற அயோக்கியர்களின் கற்பனையில் உருவானவை

இந்துமதமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று பொருந்தி வருபவை

பல விஞ்ஞான தத்துவங்களை மக்களுக்கு புரியும் படி அன்றே சில எளிய உருவங்களில் விளக்கிய மதம் இந்துமதம்

விஞ்ஞானம் என்ன சொல்கின்றது என்றால், தொடக்கத்தில் ஒரு உயிர்தான் இருந்தது அது தன்னில் இருந்து பிரிந்து இரு உயிராகி பலுகி பெருகியது

மண்புழு இரண்டாக வெட்டினால் அவை இரு உயிராகும் அல்லவா? அப்படியான தத்துவம் அது

இதைத்தான் சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் சிலை விளக்குகின்றது, ஆணும் பெண்ணும் ஒரே உயிரில் இருந்து வந்தவர்கள் என்பதை எளிதாக விளக்கும் சாயல் அது

பிரம்மன் சதரூபாவினை மணந்த கதையும் இதுதான்

ஆதாம் ஏவாள் கதையும் இதுதான்

ஆக விஞ்ஞானம் மற்றமதம் அப்படியே இந்துமதத்தின் மூல பாஷை எல்லாம் படித்தால் உங்களுக்கு உண்மை தெரியும்

மாறாக ஈரோட்டு 2ம் கிளாஸ் ராம்சாமி என்பவர் அதாவது வளர்ப்பு மகளையே மணந்தவர் சொன்னபடி எல்லாம் யோசித்தால் புத்தி அப்படித்தான் போகும்