இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி

பைபிளில் ஒரு முரண்பாடு உண்டு, பழைய ஏற்பாட்டு கடவுள் பொல்லாதவர். ஏதும் தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார், மகா பயங்கர கோபக்காரர்

உண்ணாதே என சொன்ன ஒரு பழத்தை ஆசைபட்டு உண்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் அந்த கோபக்கார‌ கடவுள்

ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா அப்பாவியாக அடிவாங்கி சிலுவையில் மரித்தவரும் அவரே

காலங்கள் மாற மாற கடவுளும் மாறியிருக்கின்றார், சரி விஷயம் கடவுள் அல்ல அந்த தொடக்க காட்சி

ஆம், மனிதன் அன்று அறிவில்லாமல் பகுத்தறிவு இல்லாமல் விலங்கோடு விலங்காக இருந்தான், கடவுளுக்கு அவனுக்கு அறிவு வருவது பொறுக்கவில்லை, அவன் விலங்காக இருக்கவே ஆசைபட்டார்

அவன் ஆடை அணிவதை கூட அவர் விரும்பவில்லை, இதனால் அறிவு கொடுக்கும் பழத்தை உண்ணாதே என மிரட்டி வைத்திருந்தார்

ஆனால் பாம்புதான் அவன் அறிவுபெற விரும்பி பழம் சாப்பிட சொன்னது, அதை உண்டதும் மனிதனுக்கு அறிவு வந்து தான் ஆடையின்றி இருப்பதை உணர்ந்து ஆடை அணிந்தான், மனிதனுக்கு அறிவும் மானமும் வந்ததை பொறுக்க முடியா கடவுள் அவனை வெளியே விரட்டினார்

இது பைபிளில் தொடக்க காட்சி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின் தொடக்க காட்சி இதுதான்

நிச்சயம் பாம்பு மனிதனுக்கு பழம் கொடுத்திருக்காவிட்டால் இப்பூமியில் மனிதனும் விலங்கோடு விலங்காக வாழ்ந்திருப்பான், அவனுக்கு மானமும் அறிவும் புத்தியும் வந்திருக்காது, உலகம் இப்படி மாறியிருக்காது

இன்று காணும் உணவும் கலையும் விஞ்ஞானமும் வந்திருக்காது, குரங்கு போல் அவனும் திரிந்திருப்பான்

அதை மாற்றி மனிதனுக்கு அறிவு கொடுத்து சிந்திக்க வைத்து உலகை மாற்றியது சாத்தான் எனும் பாம்பு, ஆம் அவனே மானிட குலம் அறிவுபெற ஆசைபட்டான், உலகம் அவனால் மாறியது

கடவுளின் அடிமைதனத்தில் இருந்து மானிடனை மீட்டு அறிவும் சிந்தனையும் கொடுத்தவன் அவனே, சிந்திக்க சொன்னவன் அவனே

சரி, இந்த பகுத்தறிவு திராவிட கோஷ்டிகள் என்றாவது இதை படித்து உணர்ந்து மனிதனுக்கு அறிவு கொடுக்கா கடவுள் ஒழிக, அறிவும் மானமும் கொடுத்த சாத்தான் வாழ்க என ஊர்வலம் போகுமா?

மனிதனுக்கு அறிவு கொடுக்காமல் அவனை விலங்காய் வைத்தவன் எப்படி கடவுளாவான்? என ஊர்வலம் போகுமா?

மானிடன் அறிவும் மானமும் பெற்று வாழவிரும்பிய சாத்தான் எனப்படும் பாம்பே கடவுள், அறிவு கொடுக்க விரும்பா கடவுளே சாத்தான் என கிளம்புமா?

கிளம்பமாட்டார்கள்

காரணம் கிளம்பினால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின் மூல கதையான இச்சம்பவம் அவர்களை புண்படுத்தும் அவர்கள் இவர்கள் முதுகு தோலை உரிப்பார்கள்

இதனால் பைபிளின் மகா முக்கிய பகுத்தறிவு காட்சி கண்முன் இருந்தும், மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என சாத்தான் போதித்த காட்சி இருந்தும் அதை எல்லாம் ஏறேடுத்தும் பார்க்கமாட்டாகள்

இந்த கள்ள அறிவின் பெயர் திராவிட புரட்சி, இந்த அயோக்கியதனத்தின் பெயர் ஈரோட்டு ராம்சாமியின் சிந்தனைகள்

ராமன் அயோக்கியன் ராவணன் நல்லவன் என கிளம்பும் கோஷ்டி, தேவர்கள் அயோக்கியர்கள் அசுரர் நல்லவர்கள் என கிளம்பும் கோஷ்டி, பைபிளில் கடவுள் கெட்டவர் சாத்தான் நல்லவன் நாங்கள் சாத்தான் சாதி என கிளம்பாதது ஏன்?

அசுரன் என ஒப்புகொள்ளும் கூட்டம் தங்களை சாத்தான் என ஒப்புகொள்ள தயங்குவது ஏன்?

இதனால்தான் சொல்கின்றோம்

ஈரோட்டு ராம்சாமியின் இந்துவெறுப்பு சுயநலம் மிகுந்த காட்டுமிராண்டிதனம்

இந்து இதிகாசங்ளை மட்டும் அவர் குறி வைத்தது சுயநலம் மிகுந்த அயோக்கியதனம்

ஈரோட்டு ராம்சாமி உண்மையான கடவுள் மறுப்பாளன் இல்லை, இல்லை இல்லவே இல்லை. இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி

அவரை நம்புவன் முட்டாள், அவரை சரி என பின்பற்றுபவன் அயோக்கியன், அவருக்காக ஊர்வலம் செல்பவன் மடையனிலும் அடி மடையன்