இந்த அறைநண்பன் நிச்சயம் ஒரிஜினல் திமுக என்பது தெரிந்துவிட்டது
இந்த அறைநண்பன் நிச்சயம் ஒரிஜினல் திமுக என்பது தெரிந்துவிட்டது, ஆம் சந்தர்பத்துக்கு ஏற்றபடி அப்படி பல்டியடிப்பான்
திமுக பெரியார் அண்ணா என்பான் ஆனால் ஆலயம் என வந்துவிட்டால் மத்தியில் அமைச்சரவை கிடைக்க திமுக பம்முவது போல் அப்படி பம்மிவிடுவான்
புரட்டாசி மாதம் முதல் சனி என்பதால் அதிகாலையே பெருமாள் கோவிலுக்கு ஓடினான், சரி நாமும் செல்வோம் என சென்றாயிற்று
மலேசிய இந்தியர்களிடம் இருக்கும் மிக மிக நல்ல விஷயங்களில் ஒன்று ஆலய பராமரிப்பு
அது இந்து, கிறிஸ்தவ,சீக்கிய ஆலயம் என வேறுபாடில்லை எல்லா மத ஆலயமுமே மிக மிக அழகானவை
இந்துக்களின் ஆலயங்கள் மகா மகா சிறப்பாக அதை விட அதிசுத்தமாக பராமரிக்கபடும்
வாடிய பூ என்றோ அணைந்த தீபம் என்றோ ஒன்றையும் உள்ளே பார்க்கமுடியாது, சுரண்டிபார்த்தாலும் ஒரு மில்லி கிராம் அழுக்கு தரையிலும் தூணிலும் இருக்காது
அந்த அளவு மிக மிக அழகான பராமரிப்பு
இதற்கு காரணம் அறநிலையதுறை எனும் இம்சை இல்லை, அதிகாரி இல்லை, இன்னும் நிறைய இல்லை
தங்கள் இல்லத்தை போல ஆலயத்தையும் மனதார நேசிக்கும் நன்மக்களால் அது அழகாக பராமரிக்கபடுகின்றது, தெய்வமும் வந்து அமர்கின்றது
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது மலேசிய ஆலயங்களில் மிக சரி
அது சிறிய கோவில், ஆனால் அழகாக சாஸ்திரப்படி அமைத்திருந்தார்கள், சுற்றிலும் ஆழ்வார்களின் பாடல்களை அழகுற எழுதியிருந்தார்கள், கடவுள் படங்களை மண்டப கூரையெல்லாம் வரைந்திருந்தார்கள், எல்லா தெய்வங்களுக்கும் சந்நிதி இருந்தது, நவகிரகம் உட்பட
நமது ஊரில் பெருமாள் போன்ற பெருந்தெய்ய கோவிலில் முனிஸ்வரர் போன்ற சிறுதெய்வங்கள் இருக்காது, ஆனால் இங்கு சமத்துவம் எல்லா சாமியும் ஓரிடத்தில் இருக்கும்
மேளசத்தமும், பூக்களின் மணமும், தமிழும், வெண்கல மணியோசையும் அப்படியே தமிழகத்திற்கே அழைத்து சென்றன, நெடுநாள் பின் கேட்ட ஓசை அது
பெருமாள் நடை சாத்தி இருந்தது, திரை போட்டு மறைத்திருந்தார்கள்
நேரம் வந்ததும் குருக்கள் வந்தார், எல்லா சந்நதிக்கும் சென்று திரைமறைவிலே பூசைகள் செய்தார், மணி மட்டும் எழுப்பினார்கள், பின் திரை விலக்கபட்டது
இது எந்த முறையின் மூலம்?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் சாட்சாத் கடவுளே தன்னை எப்படி வணங்க வேண்டும் என கட்டளையிட்ட உத்தரவுகளின் மூலம்
எருசலேம் யூத கோவிலில் வழிபாடு இப்படித்தான் இருந்தது, தலமை குரு மட்டுமே உள்சென்று தூபமிடுவார், திரை மறைக்கபட்டிருக்கும், மணிசத்தம் கேட்கும்பொழுது வெளியே மக்கள் வணங்குவார்கள்.
இந்து பூசாரி உடலெல்லாம் விபூதி பூசுவது போல, அவர்கள் சாம்பலை அந்நாளில் பூசுவார்கள்.
இதே மணி, இதே திரை, இதே தூபம், அதே மேளம்( அங்கு கொம்பு ஊதுவார்கள்) இந்த சூடத்திற்கு பதிலாக அங்கே விளக்கு தண்டு
யூதர்களுக்கு ஜெருசலேம் தவிர வேறு ஆலயம் உலகில் கிடையாது, அந்த ஆலயமும் இன்று இல்லை, அதனால் அந்த வழிபாடுகள் 2000 ஆண்டுகளாக இல்லை
இருந்திருந்தால் இந்த பிராமண குருக்கள் செய்வது போலவே அங்கு அவர்கள் செய்துகொண்டிருப்பார்கள், சிலை மட்டும் இருக்காது
இந்த வழிபாட்டு முறை யூத இனத்துக்கு சொந்தமானதா என்றால் இல்லை, அது அன்றைய உலகின் வழிபாட்டு முறையாய் இருந்திருக்கின்றது
யூத இனம் முதலில் சாதாரண ஆடுமாடு மேய்க்கும் இனம், அந்த ஆபிரகாம் அப்படித்தான் பாபிலோன் பக்கம் மாடுமேய்த்திருந்திருந்தான், அவன் இன்றைய பாலஸ்தீன் பக்கம் செல்லும் பொழுது அதாவது யூத இனத்தினை தொடங்கும் பொழுது அந்த இனம் அப்படி அல்ல
பின்னாளில் அவனை கடவுள் சோதித்ததும் 12 கொள்ளு பேரன்கள் பிறந்து அவர்கள் எகிப்துக்கு அடிமையாய் சென்று திரும்பியதில் இருந்தே யூதர்களுக்கு அறிவு வந்தது
அது பாபிலொன் அடிமைதனம், கிரேக்க ரோம அடிமைதனம் என தொடர்ந்து பின்னாளில் உலகெல்லாம் சிதறி எங்கெல்லாமோ பெற்ற அறிவுகளின் மொத்த தொகுப்பாக இன்று விளங்குகின்றது
நாம் சொல்லவரும் விஷயம் இதுதான், அந்நாளைய உலக வழக்கங்களின் வழிபாட்டுமுறைதான் யூத முறையே
மிக தொன்மையான இந்துக்களின் வழியினை அவர்கள் ஏற்றிருக்க கூடும், ஞானி சாலமோன் அவ்வழியிலே தன் புகழ்மிக்க ஆலயத்தை அமைத்திருக்கலாம்
இந்துக்களின் ஆலயமும் சாலமோன் கண்ட ஆலயமும் அமைப்பால் ஒன்றே தெப்பகுளம் உட்பட
ஆனால் இந்துமதம் சாலமோன் காலத்துக்கும் முந்தையது என்பதால் இங்கிருந்துதான் விஷயம் அங்கு சென்றிருக்கலாம்
நிச்சயம் அங்கிருந்து வந்திருக்காது, வரலாற்றில் யூத இனமே எல்லா இனத்தில் இருந்தும் தனக்கு தேவையானதை எடுக்குமே அன்றி இந்து தர்மம் அப்படி அல்ல
அது நதி போல தன் பாதையில் சென்றுகொண்டே இருக்கும், எந்த கலப்பும் அதில் இல்லை
ஆக பைபிள் சொல்லும் யூத ஆலய வழிபாடு இந்துக்களில் இருந்து தொடங்கியதாக இருக்கலாம், ஆம் அது அடுத்தவரின் அறிவினை கடன் வாங்கியே வளர்ந்த மதம்
உண்மையில் கிறிஸ்தவ வழிபாடு இந்த இந்து கலாச்சார முறைகளில்தான், அதாவது கத்தோலிக்க முறையில்தான் அமைக்கபட வேண்டும், ரோமன் கத்தோலிக்க முறை அப்படியானதே
ஆனால் கிறிஸ்தவம் யூத சம்பிரதாயங்களை விழுங்கிவிட கூடாதென்ன்று அதனை அந்நாளைய சில யூதர்களே வழிமாற்றிவிட்டுவிட்டார்கள்
நிச்சயமாக இயேசு யூதர்களை திருந்த வந்தார், அவர் கனவு நிறைவெறி இருந்தால் இந்நேரம் யூதமதமே உலகில் இருக்காது, மறைந்திருக்கும்
ஆனால் தந்திரமாக இயேசு புறஇன மக்களை மீட்க வந்தார் என திருப்பிவிட்டு தன் அடையாளத்தை காத்துகொண்டது யூத இனம்.
ஆம் தன் மதத்துக்கு வந்த ஆபத்தை எல்லா மக்களுக்கும் அவர்களின் பாவத்துக்கும் இயேசு சிலுவையில் மரித்தார் என திசை திருப்பிவிட்டது, அதில் கிறிஸ்துவின் இலக்கான யூத மதம் தப்பியது
கிரேக்க மதம், ரோமை மதம், அரேபியாவின் சில மதங்களை பூண்டோடு ஒழித்த கிறிஸ்தவம் தன் தாய்மதமான யூதமதத்தை எப்படி விட்டு வைத்தது என்ற கேள்விக்கெல்லாம் எந்த கொம்பனிடமும் பதில் இருக்காது
அந்த கோயிலில் அமர்ந்திருந்தபொழுது யூத இந்து தொடர்புகள் மனதில் சுழன்றுகொண்டே இருந்தன
யாகம் வளர்ப்பது என இன்று இந்துக்கள் செய்யும் காரியமும், பலி என் அன்று யூதர்கள் செய்த காரியமும் ஒன்றே
இன்னும் ஏராள ஒற்றுமைகள் உண்டு, சுருக்கமாக சொன்னால் கத்தோலிக்க முறை அந்த யூத பாரம்பரியத்தை அடிபொற்றி வருகின்றது
தீபம், மெழுகுவர்த்தி, சாம்பிராணி , குருக்களின் உடை, பீடம் என பலவும் அச்சாயலே
திருப்பலியில் மணி ஒலிப்பது கூட அதே சாயலே, ஆம் இந்துக்களின் வழிபாட்டு சாயல்
ஆனால் பிரிவினை கிறிஸ்தவ கும்பலுக்கு அந்த கவலையுமில்லை, சிந்தனையுமில்லை
அம்பானி அளவு தொழிற்சாலை அமைக்க பெரும் நிதியும், மூலமும் வேண்டும்
ஆனால் சந்தையில் காய்கறி கடை கமிஷன் கடைகாரனுக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் போதும்
அப்படி அவர்களுக்கு ஒரு பைபிள் மட்டும் போதும்
சில நேரம் இம்மாதிரி சிந்தனைகள் எழுகின்றன, அவ்வப்போது பார்க்கலாம்