இந்த உலகம் புதுவிதமான சிக்கலை எதிர்கொள்கின்றது

இந்த உலகம் புதுவிதமான சிக்கலை எதிர்கொள்கின்றது, இன்று எல்லாமே டிஜிட்டல் மயம். காகிதங்களும் இன்னும் பல விஷயங்களும் இல்லாமல் போய்கொண்டிருக்கின்றன‌

அட நம்மையே எடுத்து கொள்ளுங்கள், கையில் இருக்கும் போன் தொலைந்தால் நம்மில் பாதி சென்றுவிட்டு உயிர்மட்டுமே மிஞ்சுகின்றது. நண்பர் பட்டாள தொடர்பு, குடும்பத்தார் தொடர்பு ,வங்கி கணக்கு முதல் கள்ளகாதல் நல்ல காதல் எல்லாம் அதில்தான் இருக்கின்றது

அதாவது ஒரு விஷயத்தை ஒரு பொருளில் பதியவைப்பது சரி , ஆனால் அது தொலைந்துவிட்டால் அவ்வளவுதான், ஒரு காலமும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது

தகவல்களும் இன்னும் பலவும் நிறைந்துவிட்ட உலகம் முக்கியமான விஷயங்களை எதில் பதியவைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பதில் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றது

காகிதம் அரித்துவிடும், பனையோலை, ஆட்டுத்தோல் இன்னும் பல சாத்தியமில்லை, கல்வெட்டுக்கள் எல்லாம் வெறும் அடையாளம்

டிஜிட்டல் என்பது வெறும் விஞ்ஞான விளையாட்டு, நொடியில் தகவல் காணாமல் போகலாம்

இப்படி எல்லாம் மண்டையினை போட்டு உடைக்கும் விஞ்ஞான உலகம் , பண்டைய இந்துக்களை ஞானத்துடன் வணங்குகின்றது, ஆம் அவர்கள் அன்றே சில விஷயங்களை இப்படி பாதுகாக்கும் வழிகளை சொல்லியிருக்கின்றார்கள்

ஆம், சில புனிதமான மந்திரங்கள் இன்னும் முக்கியமான செய்திகள் எல்லாம் செவிவழியாய் சொல்லபட்டு மனதில் பதியவைக்கபடுவதின் காரணம் அதுவே

காகிதம் கிழியலாம், போன் தொலையலாம் இன்னும் எழுதி வைத்த விஷயங்களுக்கு ஆயிரம் இடைஞ்சல் வரலாம்

அக்காலத்தில் பனையோலை முதல் பல விஷயங்கள் இருந்தாலும் ஏன் பலவற்றை மனதால் பதியவைத்து மனப்பாடம் செய்ய சொன்னார்கள் என்றால் அதனால்தான்

மனதில் பதியவைக்கும் விஷயம் அழியாது, மனதை போல் சிறந்த லாக்கருமில்லை பெட்டகமுமில்லை

இதனால் இந்துக்கள் அக்கால மந்திரங்களையும் பாடல்களையும் மனனம் செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார்கள், அதை சந்ததி தோறும் வழக்கமாக மனனம் செய்ய வைத்து பன்னெடுங்காலமாக அவற்றை காப்பாற்றி வந்தார்கள்

சுலோகம் முதல் புராணங்கள் வரை மனதில் பதியவைக்கபட்டு காக்கபட்டு வந்தது இதனால்தான்…

ஆம், சொல்ல வந்தது அதுவேதான்

எந்த ஆராய்ச்சியினை எடுத்தாலும் அந்நாளைய இந்துக்களின் சில ஞானமான விஷயங்களை ஒப்பிட்டு வியந்து கொள்கின்றது இன்றைய விஞ்ஞானம்