இந்த கோட்சே போன்ற தியாகிகள்..

பாராளுமன்றத்தில் ராசா எதையோ பேசியிருக்கின்றார், மற்றவர்கள் எல்லாம் “ஓ..ஓ திமுக உறுப்பினரா?…” என பார்த்துவிட்டு குட்டி தூக்கம் போட தயாரகிவிட்டனர்

ஆனால் இந்த பிரக்யாராஜ் மட்டும் “இந்த கோட்சே போன்ற தியாகிகள்..” என தொடங்கிவிட, மற்ற எதிர்ப்பு எம்பிக்கள் எல்லாம் கிரிக்கெட்டில் அப்பீல் கேட்கும் பீல்டர்களாக “ஸ்பீக்கர்… ஹவ் இஸ் திஸ்” என கத்திவிட்டனர்

அம்மணி “இல்லை இல்லை ஜெனரல் டயரை கொன்ற உத்தம்சிங் போன்ற தியாகி என சொல்லவந்தேன்..” என சொன்னாலும் எதிர்கோஷ்டி விடுவதாக இல்லை

அம்மணி கட்சி கூட்டம் என நினைத்து பாராளுமன்றத்திலும் பேசிவிட்டது

விஷயம் பெரிதானது, ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு பிஜேபி தள்ளபட்டது, அம்மணியினை சில பல இடங்களில் இருந்து தள்ளி வைத்துவிட்டார்கள்

ஆக மூன்றாம் அம்பையர் அவுட் கொடுத்த மகிழ்ச்சியில் எதிர்கோஷ்டி ஆளாளுக்கு கைதட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றது..