இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த் காமெடிகள்

இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த்

ஆமாம் மிஸ்டர் ரஜினி, இந்த நடிகர்கள் எல்லாம் என்ன சம்பளம் வாங்குகின்றார்கள்?, கறுப்பாக எவ்வளவு? வெள்ளையாக எவ்வளவு? என்ன வரி கட்டுகின்றார்கள் என ஒரு மண்ணும் புரியவில்லை

இத்தனை நூறு கோடி சம்பாதிக்கின்றார்கள்? அவர்களை வைத்து ஜாஸ் சினிமா போன்றவையும் சம்பாதிக்கின்றன, அவர்களால் அரசுக்கு என்ன லாபம் எனவும் தெரியவில்லை

திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த மேடையிலும், அதிமுக ஆட்சிக்கு வந்தா பின் வரிசையிலும் நின்றுகொண்டும், இரு கட்சிகளுமே இல்லாத நிலையில் டெல்லிக்கும் அருகில் நின்று கொண்டு வரிகளிலிருந்து தப்பிக்கும் அந்த நடிகர்களை கண்காணிக்க முடியாத அளவிற்கு சிஸ்டம் கெட்டுவிட்டது

பல நூறுகொடி செலவு செய்து, பல்லாயிரம் கோடி வசூலாகும் தமிழ்படங்களுக்கு, தமிழ்பெயர் வைத்தால் வரிவிலக்கு எனும் அளவில் பரிதாபமாக சிஸ்டம் கெட்டு போயிற்று

ஆம் ரஜினி அந்த அளவிற்கு இங்கு சிஸ்டம் கெட்டுபோய்தான் இருக்கின்றது, இதனை நீர் வந்து சரிசெய்ய முடியுமா?

முடியுமென்றால் உங்களில் இருந்து சரிசெய்துவிட்டு இந்த சிஸ்டத்தை சரி செய்ய வாருங்கள்


ரஜினிகாந்தை பாஜகவில் சேர்க்க கூடாது: சுப்பிரமணிய சாமி

அதானே, பாஜக 4 வோட்டு தமிழகத்தில் வாங்குவது இவருக்கு எந்த காலத்தில் பிடித்திருந்தது?

நீங்கள் தமிழிசை, எச்.ராஜா வைத்தே ஆட்சியினை பிடித்துவிடலாம் சாமி, ரஜினி எதற்கு வீணாக கட்சிக்கு வேண்டும்?


ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம் : சீமான்

மிஸ்டர் சைமன், எவ்வளவு நாள்தான் உங்களின் அரசியல் காமெடி மட்டும் பார்த்துகொண்டிருக்க முடியும்?

தமிழக காமெடி அரசியலை நீர் மட்டும் குத்தகைக்கு எடுத்திருக்கின்றீரா என்ன?

அவரும் கொஞ்சம் காமெடி செய்யட்டும், வழிவிடுங்கள் சைமன்..

என்னமோ இவருக்கு 150 எம்.எல்.ஏக்களும், 20 எம்பிகளும் இருப்பதை போலவும், ரஜினி அதனை பறித்துவிடுவதை போலவும் பேசிகொண்டிருக்கின்றார்……