இந்த டிரம்ப் என்பவருக்கு…

இந்த டிரம்ப் என்பவருக்கு தான் சொன்னதில் ஒன்றையாவது நடத்திகாட்டவேண்டும் என்ற வெறி உச்சத்தில் இருந்தபொழுது ஒரு முடிவெடுத்துவிட்டார்

அதாவது ஒபாமாவும் இரானும் செய்துகொண்ட அணுஒப்பந்தம் செல்லாது என அறிவித்துவிட்டார்.

அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் கோமேனி பதவிக்கு வந்ததில் இருந்தே சிக்கல்தான். அடிக்கடி உரசுவார்கள், ஈரானும் மிக சமத்த்தாக நடந்துகொள்ளும்

அப்படி ஈரானின் அணுகுண்டு நடவடிக்கையினை தடுக்கவும், இன்னும் சில அமைதி முயற்சிகளுக்காகவும் ஈரான் அணுசக்தியினை ஆக்க சக்திக்கு பயன்படுத்தலாம் என முடிவுசெய்தார் ஒபாமா

அவர் போரை தவிர்த்து அந்த ஒப்பந்தம் செய்து நோபல் பரிசெல்லாம் வாங்கினார்

டிரம்ப் வந்து அந்த ஒப்பந்தம் செல்லாது என உரக்க சொல்லி கிழித்து போட்டுவிட்டார். உலகம் அதிர்ந்து நிற்கின்றது

பெரும் பரபரப்பினை உலகம் எதிர்கொள்கின்றது, ஈரானும் ரஷ்யாவும் எகிறுகின்றன‌

இந்த திட்டத்திற்கு சூத்திரதாரி இஸ்ரேல் என்பது உலகறிந்தது, அது சந்தோஷமாக தீபாவளி கொண்டாட ரெடி

அமெரிக்க மோடிக்கு அடிமையான பன்னீர் போன்ற‌ சவுதியும் ஆமாம், அப்படித்தான் என கைதட்டுகின்றது

இது பெரும் சிக்கல்களை உருவாக்கலாம், போகிற போக்கை பார்த்தால் உலகின் 3ம் அணுகுண்டு கிழக்கே வடகொரியா பக்கம் வெடிக்குமா? இல்லை மேற்காசியாவில் வெடிக்குமா? என பெட் கட்டலாம் போலிருக்கின்றது.