இந்த தமிழ்நாடு பாஜகவினை வைத்து என்ன செய்ய?
“எத்தனை ரெய்டுகளை நடத்தி என்னாயிற்று ஒண்ணுமில்லை, இந்த தமிழ்நாடு பாஜகவினை வைத்து என்ன செய்ய, மண்ணுக்குள் இருந்தா தாமரை மலரும்?
நாம் இவ்வளவுதான் செய்ய முடியும்? பழனிச்சாமி கோஷ்டியினை மிரட்டி நாங்கள் ஆர்.கே நகரில் நிற்போம் நீங்கள் ஆதரவு தரவேண்டும் என நிற்க வேண்டியது தமிழக பாஜகவினர் செய்ய வேண்டியது
அவர்களோ இன்னும் வேட்பாளரை தேடிகொண்டிருக்கின்றார்களாம்
ஒரு பயலும் கிடைத்ததாக தெரியவில்லை, கிடைத்தாலும் அதை வைத்து இவர்கள் என்ன கிழிக்க போகின்றார்கள் எனவும் தெரியவில்லை
பழனிச்சாமி அரசை மிரட்டி இவர்கள் நின்று வென்று கணக்கை தொடங்க வேண்டாமா? இதெல்லாம் சொல்லியா தெரியவேண்டும்
இந்த தமிழக பாஜக தலைவர்களை வைத்துகொண்டு என்ன செய்ய? பேசாமல் இனி தமிழகத்தை மறந்துவிட வேண்டியதுதான்…”
இந்தியா முன்னேற எந்த விலை கொடுக்கவும் தயார் : மோடி
ஒரு விலையும் கொடுக்க வேண்டாம், இந்த மதவாதத்தை மட்டும் தூர எறியுங்கள் அது போதும்
“ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, பினிசிங் சரியில்லியப்பா..”