இந்த தேசத்தை விட உயர்ந்தவரா அமைச்சர் ஜெயக்குமார்?
அமைச்சர் ஜெயக்குமார் பற்றியும் அவர் குடும்பத்தார் பற்றியும் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்த Sathish Kumar என்பவர் கைது செய்யபட்டிருக்கின்றாராம்
அரசியலில் அதுவும் பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பது வழக்கமானது, யாரும் தப்பமுடியாது. இது சம்பந்தமாக ஜெயாவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கொட்டு வாங்கியிருந்தார்
ஆனால் ஜெயக்குமாரின் குடும்பத்தாரை பற்றி எழுதியிருந்தால் அது நிச்சயம் கண்டிக்கதக்கது.
ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும்.
இதே முகநூலில் கலைஞரை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள், எவ்வளவு அவமானமாக எழுதுகின்றார்கள்
சைமன் போன்றவர்கள் பேசிய, பேசும் பேச்சுக்கள் எவ்வளவு மட்டமானவை, அவர்களை எல்லாம் என்ன செய்தார்கள்?
சைமன், திருமுருகன் , வேல்முருகன், கவுதமன் எல்லாம் தேசதுரோக பேச்சுக்களை பேசுகின்றார்கள், அவர்களின் அடிப்பொடிகள் முகநூல் முழுக்க நஞ்சு விதைக்கின்றார்கள்.
மோடிபற்றி அள்ளிவிடும் கதைகள் கொஞ்சமல்ல, இந்திய நாடு பற்றி இவர்கள் தரக்குறைவாக சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொரு இந்தியனையும் கொதிக்க செய்பவை
இவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஜெயக்குமாரை விமர்சித்தவர்களை பிடித்துவிட்டார்களாம்
இந்த Sathish Kumar என்பவர் என்ன எழுதினார் என்பது வெளியிடபடவில்லை.
இந்த திருமுருகன் கும்பல், சைமன் கும்பல் போன்ற தேசதுரோகிகளை பிடித்தால், என்ன எழுதினார்கள் என ஆதாரம் காட்ட முகநூல் நிறைந்து கிடக்கின்றது.
இந்த தேசத்தை விட உயர்ந்தவரா அமைச்சர் ஜெயக்குமார்?