இந்த நக்கீரனை விட மோசமான மீடியா பிபிசி தமிழ்
இந்த நக்கீரனை விட மோசமான மீடியா பிபிசி தமிழ்
மிக பெரும் பிரிவினைவாத மீடியா அது, எதனையாவது அள்ளிவிடும்
இப்பொழுது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது கீழடி நாகரீகம், அய்யோடா கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்பே.. என அது கிளம்பிவிட்டது
அதைபார்த்த பதர்களுக்கு தமிழன்டோவ். என அதே விசில் சத்தம்
சிலப்பதிகார காலம் 4 ஆயிரம் வருடத்துக்கு முந்தையது, அந்த புகபெற்ற பூம்புகார் இன்று கடலில் கிடக்கின்றது
2600 என்பது பன்னெடுங்காலம் அல்ல, அந்த காலகட்டத்தில் புத்தர் வந்திருந்தார் அவருக்கு பின் அசோகர் இருந்தார், கொஞ்ச இடைவெளியில் அலெக்ஸாண்டர் சிந்துநதிவரை வந்திருந்தான்
அதற்கு பின்னரான இடைவெளியில் ரோமை சாம்ராஜ்யம் எழும்பியது
இவர்களுக்கு பின்பு ஆயிரம் வருடத்துக்கு பின்புதான் சோழசாம்ராஜ்யம் வந்தது
பூம்புகாரை சொல்லுங்கள் அதில் விஷயமிருக்கின்றது, தமிழனின் பெரும் அடையாளம் அது ஆனால் அது கடலில் சிக்கிகொண்டது
கீழடி என்பது பெரும் முன்னோடி நாகரீகம் அல்ல, சிந்து மெசபடோமியா எகிப்து போல மிக மிக பழைய தொன்மத்துக்கு அது வராது
ஆனால் இவர்கள் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல
பிரமீடின் வயதென்ன என கேட்டால் கொஞ்சமும் வெட்கமின்றி அதுவும் தமிழன் கட்டியது தெரியுமா? அதற்கு எவ்வளவு காலமானால் என்ன என சிரிக்காமல் சொல்வார்கள்