இந்த பழனிச்சாமி கோஷ்டி
ஒரு மனிதன் தடுமாறலாம் ஆனால் இப்படி குப்புற விழகூடாது, டாஸ்மாக் நடத்தும் அரசுதான் ஆனால் இப்படி போதை போடாமலே உளற கூடாது
அப்படி என்ன உளறல்?
இலங்கையில் நடந்த இன அழிப்பினை திமுக எதிர்க்கவில்லையாம், அதை எதிர்த்து அதிமுக ஆர்பாட்டமாம்
அட பதர்களா? அது நடந்து 10 வருடம் ஆக போகின்றது, அவர்களே மறந்தாயிற்று, இவர்கள் இப்பொழுதுதான் விழித்திருக்கின்றார்கள்
சென்னையில் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தவர் ராமசந்திரன், கண்டித்தது கலைஞர்
ஈழசிக்கலில் அமைதிபடையினை அனுப்பாதே என்றவர் கலைஞர், அமைதிபடையினை அனுப்பிய ராஜிவோடு கைகோர்த்து நின்றவர் ராமசந்திரன், அமைதிபடை சென்றதுதான் முதல் சிக்கல்
ராஜிவ் கொலையில் அவருடன் அன்று கூட்டணியில் இருந்த ஜெயா ஏன் திருபெரும்புதூர் செல்லவில்லை என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு
எல்லாவற்றிற்கும் மேல் “2009ல் ஈழநெருக்கடிக்காக கலைஞர் மத்திய அரசுக்கான ஆதரவினை விலக்கினால் அதிமுக காங்கிரசை ஆதரிக்கும்” என வலிய சொன்னவர் ஜெயலலிதா
2009 முள்ளிவாய்க்கால் உச்சத்தில் இருக்கும்பொழுது கலைஞராவது உண்ணாவிரதமாவது இருந்தார், ஆனால் ஜெ என்ன செய்தார்?
“போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்” என அசால்ட்டாக சொல்லிசென்றார். அதுதான் அநியாயம்
பிரபாகரனை இந்திய ராணுவத்தை அனுப்பி பிடித்து வந்து தூக்கில் இடவேண்டும் என தீர்மானமிட்டவர் ஜெயலலிதா
ஆக இந்த பழனிச்சாமி கோஷ்டி ஈழவிவகாரத்திற்காக கண்டித்து போராடவேண்டும் என்றால் ஜெயா சமாதி முன் போராடட்டும், சட்டசபையில் உள்ள ஜெயாபடத்தினை செருப்பால் அடித்து கண்டனம் தெரிவிக்கட்டும்
அதனை செய்துவிட்டு இப்பக்கம் வரட்டும்
கோமாவில் இருந்த பழனிச்சாமி கோஷ்டி இனி படிபடியாக இந்திராவினை கொன்ற பியாந்த்சிங்கிற்கும், காந்தியினை கொன்ற கோட்சேவிற்கும் அவனை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்க்கும் எதிராக போராடும்
அப்படியே வெள்ளையனை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடும் காட்சிகளும் வரலாம்
(சரி 2011ல் இருந்து இன்றுவரை ஆளும் அதிமுக அதன் பின் ஈழமக்களுக்கோ இல்லை போர்குற்றத்திற்கோ என்ன செய்தது என் யாரும் கேட்டுவிட கூடாது
டெல்லியில் இருக்கு 37 ..கள் என்றாவது டெல்லியில் ஈழம்பற்றி பேசினார்களா எனவும் கேட்க கூடாது
அப்படியே செங்கோட்டையனும், ஏ.சி சன்முகமும் எதற்கு இலங்கை சென்றார்கள், சிங்கள அரசுடன் அவர்களுக்கு என்ன பல்லிளிப்பு எனவும் கேட்க கூடாது..)
மிஸ்டர் எடப்பாடி & கோ, உங்கள் தகவலுக்காக…
சொன்னது யாருமல்ல, உங்கள் தலைவி புரட்சி தலைவி அம்மாவே தான். கொஞ்சம் அறிவிருந்தால் இந்த போராட்டத்தை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கவும்
இதில் பின்வாங்கினால் உங்களுக்கு ஒன்றும் மானம் போய்விடாது, ஏனென்றால் இருந்தால் தானே அது போவதற்கு?
மிஸ்டர் எடப்பாடி
மோடியே ராஜபக்சேயோடு டெல்லியில் கைகுலுக்கி ரொட்டி சாப்பிடும்பொழுது இந்த ஈழ போராட்டம் என்ன ரகம்?
முடிந்தால் “ரத்தகறை படிந்த ராஜபக்சேயுடன் கை குலுக்கிய அராஜக மோடியே …” என சொல்லுங்கள் பார்க்கலாம்
அட உங்கள் அமைச்சர்களில் ஒருவரை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
முடியாதல்லவா? பின்னர் ஏன் இந்த மோசடி போராட்டம்
உலகிலே ஆளும்கட்சி எதிர்கட்சியினை கண்டித்து போராடும் அதிசயத்தை நீங்களே நிகழ்த்துகின்றீர்கள்
பங்கு, பெட்ரோல் விலை ஏறிகிட்டே போகுது, இதனால மத்திய அரசுக்கு நல்ல வருமானம்னு அருண்ஜெட்லி ஆபீஸ் பக்கம் பேசிக்கிறாங்க, நாமும் டாஸ்மாக் சரக்கின் விலையினை கூட்டினால் என்ன?
பங்கு, பெட்ரோல் விலை 100 வந்தாலும் திட்டுவானே தவிர ஒரு பயலும் பெட்ரோல் ஊற்றாமல் இருக்கமாட்டான், ஊற்றிவிட்டு அவன் போக்கில் போய்விடுவான்
ஆனால் டாஸ்மாக்கில கைவைத்தால் அவ்வளவுதான், தமிழகம் தாங்காது. குடிமக்கள் நம்மை சும்மா விடுவார்களா? அவர்களே டெல்லிக்கு நடைபயணம் செய்து நம்மை கவிழ்த்துவிடுவார்கள்
ஆமாம் பங்கு, அவனுகள மட்டும் பகைக்கவே கூடாது, வாங்க குடிமக்களை பார்த்து கும்பிட்டுக்குவோம்