இந்த பிகில் படம் எப்பொழுது வரும் என தெரியவில்லை

இந்த பிகில் படம் எப்பொழுது வரும் என தெரியவில்லை, கால்பந்து விளையாட்டு கதை என்பது தெரிகின்றது

இப்படம் வரும்பொழுது அவரை அழைத்துவரலாம், அவர் கால்பந்து கடவுள்

ஆம் ஒரு கலை அல்லது விளையாட்டினை நேசிப்பவன் இன்னொருவன் அதை முறையாக செய்தால் கொண்டாடுவான் அவனே அதை கொலை செய்தால் விடமாட்டான்

இந்த சிந்துபைரவி சிவகுமார், சலங்கை ஒலி கமலஹாசன் எல்லாம் அவ்வகை

ஏன் நடிப்பு எனும் புனிதமான கலையினை ராம்சந்திரன் கொலையாய் கொல்வதை கண்டுதான் துப்பாக்கி எடுத்தார் ராதா, அவர் சுட்டதில் அப்படி ஒரு கடுப்பும் இருந்தது

கால்பந்தில் ஒருவர் அப்படி உண்டு அவர் பெயர் மாரடோனா

அந்த அர்ஜென்டினா கரடிகுட்டி இன்றும் கால்பந்து அதிசயம் அதை விட முக்கியம் இன்றும் எவனாவது கால்பந்து ஆட தெரியாமல் ஆடினால் மனிதர் துப்பாக்கி எடுத்து விரட்டும் ரகம்

எப்படியாவது அவரை பிகில்படம் வெளியாகும் பொழுது சென்னைக்கு அழைத்து வந்து படம்பார்க்க வைத்துவிட்டால் போதும், அதன் பின் விஜயினையும் அட்லியினையும் அவர் எம்.ஆர் ராதா ஸ்டைலில் பார்த்து கொள்வார்.